Breaking

Wednesday, May 08, 2019

அரசு பள்ளியில் இருந்து 3 மாணவிகள் ஐஎஸ்ஆர்ஓ ( ISRO ) இளம் விஞ்ஞானி பயிற்சிக்குதேர்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
புதுச்சேரியில் கிராமப் பகுதியிலுள்ள அரசு பள்ளி மாணவிகள் மூவர் ஐஎஸ்ஆர்ஓ விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இளம் விஞ்ஞானி பயிற்சிக்கு தேர்வாகியுள்ளனர்.
புதுச்சேரி கிராமப் பகுதியான ஏம்பலம் மறைமலை அடிகள் அரசு மேநிலைப்பள்ளி மாணவிகளான மோனிகா, பவித்ரா, கவிபாரதி ஆகிய மூவர் ஐஎஸ்ஆர்ஓ விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இளம் விஞ்ஞானி பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். வரும் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு செல்லும் இவர்கள் மூவரும் கிராமப் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் வரும் 12ம் தேதி முதல் 25ம் தேதி வரை பயிற்சி எடுக்கின்றனர். இவர்களுடன் வழிகாட்டி அறிவியல் ஆசிரியர் சுப்பிரமணியன், உடற்கல்வி ஆசிரியர் பிரகாஷ் ஆகியோர் உடன் செல்கின்றனர். பள்ளி துணை முதல்வர் மேகலா மற்றும் குழந்தைகள் கல்வித்துறைக்கு நேற்று வந்து கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு, இணை இயக்குநர் குப்புசாமி ஆகியோரிடம் வாழ்த்து பெற்றனர்.
கல்வித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:இளம் விஞ்ஞானி பயிற்சிக்கு புதுச்சேரி முழுக்க ஏராளமானோர் விண்ணப்பித்தனர். அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகள் என இறுதி கட்டமாக 46 பேர் பட்டியல் தயாரானது. திறன் சார்ந்த அடிப்படையில் தயாரான இறுதி பட்டியலை ஐஎஸ்ஆர்ஓ அனுப்பினோம். தகுதி அடிப்படையிலும், கிராமப் பகுதியில் இருந்துஇறுதி கட்டம் வரை முன்னேறி வந்தோர் அடிப்படையில் ஏம்பலம் அரசு பள்ளி மாணவிகள் 3 பேரை ஐஎஸ்ஆர்ஓ தேர்வு செய்துள்ளனர். குறிப்பாக கிராமப்பகுதிக்கு முன்னுரிமை தந்து தேர்ந்தெடுத்துள்ளனர், திருவனந்தபுரத்தில் ஐஎஸ்ஆர்ஓ விக்ரம்சாராபாய் விண்வெளி மையத்தில் பயிற்சி பெற உள்ளனர். இதற்கான சான்று கடிதங்களும் வந்துள்ளன" என்று குறிப்பிட்டனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog