பி.சி.பி.எம் (Physics / Chemistry / Biology / Maths) குரூப், பி.சி.பி. (PCB) குரூப், பி.சி. எம் (PCM) குரூப் ஆகியவை அறிவியல் பிரிவில் அடங்கும். பன்னிரண்டாம் வகுப்பில் இதைப் படித்தவர்கள் பொறியியல், மருத்துவம் தவிர்த்து பி.எஸ்சி. - இயற்பியல் / வேதியியல் / கணிதம், பி.எஸ்சி. - பார்மஸி, பி.எஸ்சி. - பயோ டெக்னாலஜி, பி.எஸ்சி. - டயரி டெக்னாலஜி, பி.எஸ்சி. - அகுவா கல்ச்சர் / அக்வா இன்ஜினீயரிங், பி.நாட். இன் நேச்சுரோபதி மற்றும் யோகிக் சயின்ஸ், என்விரான்மெண்டல் சயின்ஸ் ஆகியவற்றில் உங்களுக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம்.
வணிகவியல் பிரிவு
கல்வி முறையின் முக்கியமான பிரிவுகளில் ஒன்று வணிகவியல். வர்த்தகம், நிதி, பொருளாதாரம், வங்கியியல், அரசியல் ஆகியன இந்தப் பிரிவில் அடங்கும். இதைப் படித்தவர்கள் பி.காம்., பி.பி.ஏ., சி.ஏ., பி.எம்.எஸ்., பி.பி.எஸ்., பி.ஏ.ஃப்., சி.எஸ், ஆகியவற்றைப் படிக்கலாம். இவை அனைத்தும் மூன்று ஆண்டுகாலப் படிப்புகள்.
அறிவியல், வணிகவியல் ஆகியவை தவிர்த்து ஏனைய அனைத்தும் கலைப் பிரிவில் அடங்கும். வேலையைக் குறி வைத்தே இதன் படிப்புகள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. சமூக வளர்ச்சிக்கும் மனித மேன்மைக்கும் தேவையான படிப்புகள் பல இந்தப் பிரிவில் உள்ளன. சட்டப் படிப்பு, அனிமேஷன் மற்றும் மல்டி மீடியா, ஃபேஷன் டெக்னாலஜி, விஷுவல் ஆர்ட்ஸ், லைப்ரரி ஆர்ட்ஸ், பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ், ஏவியேஷன் & ஹாஸ்பிட்டல் மேனஜ்மெண்ட், ஹோட்டல் மேனெஜ்மெண்ட், ஃபிலிம் & மாஸ் கம்யுனிகேஷன், மொழிப் படிப்புகளான பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், வரலாறு, சமூகவியல், சோஷியல் வொர்க், கவின் கலை ஆகியனவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம். இவை அனைத்தும் மூன்று ஆண்டு படிப்புகள்.
உங்களுக்கு ஏற்ற பொறியியல் படிப்பு எது? இப்போது பொறியியல் படிப்பு சர்க்கியூட் கோர்சஸ் ('Circuit Courses'), நான்-சர்க்கியூட் கோர்சஸ் ('Non-Circuit Courses') என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி ஆகியவற்றைச் சார்ந்த படிப்புகள் சர்க்கியூட் படிப்புகள். மெக்கானிக்கல், சிவில் போன்றவற்றை உள்ளடக்கிய மற்ற அனைத்தும் நான்-சர்க்கியூட் வகைக்குள் அடங்கும்.