TNPSC: இந்து சமய அறநிலையத்துறை தேர்வுக்கான ஹால் டிக்கேட் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, February 17, 2019

TNPSC: இந்து சமய அறநிலையத்துறை தேர்வுக்கான ஹால் டிக்கேட் வெளியீடு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக அலுவலர் நிலை 3 மற்றும் 4 ஆகிய பதவிகளுக்குத்தேர்வு தனித்தனியே தேர்வுகள் நடைபெறவுள்ளதால் அதற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக அலுவலர் பதவிக்கான தேர்வு நடைபெறுவது குறித்த அறிவிப்பை முன்னரே வெளியிட்டிருந்ததைத் தொடர்ந்து நிலை 3 மற்றும் 4 ஆகிய பதவிகளுக்கான தேர்வுகள் முறையே வரும் சனி (16.02.2019) மற்றும் ஞாயிறு ( 17.02.2019) அன்று நடைபெறவுள்ளது. விண்ணப்பங்கள் தனித்தனியே பெறப்பட்ட நிலையில் தற்போது மேற்படி தேர்வுகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.
பெரும்பாலும் இரண்டு தேர்வுகளுக்கும் வெவ்வேறு தேர்வுக்கூடங்கள் தேர்வு செய்யப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் தேர்வர்கள் இரண்டு தேர்வுகளுக்கும் தனித்தனியே தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வுக்கூடத்தில் தேர்வு எழுதுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். விண்ணப்பதாரர்களுக்குத் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வுக் கூடத்தினைத் தவிர வேறு தேர்வுக் கூடத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அதே போல் உரிய நேரத்திற்கு தேர்வுக் கூடத்திற்கு வராமல் தாமதமாக வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்படும். தேர்வாணையம் ஒவ்வொரு தேர்வருக்கும் அவர்களது விபரங்கள், புகைப்படம், அச்சிடப்பட்ட விடைத்தாள்களை வழங்கி வருவதால், அவர்களது விடைத்தாள் அவர்களுக்கென அச்சிடப்பட்ட தேர்வுக் கூடத்தில் மட்டுமே கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews