Breaking

Tuesday, February 12, 2019

கூடுதல் மதிப்பெண் வழங்கி முறைகேடு : பல்கலை கண்காணிப்பாளர் இடமாற்றம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 8807414648
பெரியார் பல்கலைக்கழகத்தில், கூடுதல் மதிப்பெண் வழங்கி, முறைகேட்டில் ஈடுபட்ட இரண்டு தற்காலிக பணியாளர்கள், பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். தேர்வு அலுவலக கண்காணிப்பாளர், பதிவாளர் அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில், இணைவு பெற்ற கல்லுாரிகள் மூலம், இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த பருவத்தேர்வு முடிவுகள், சில வாரங்களுக்கு முன் வெளியானது. அதற்கான மதிப்பெண் பட்டியல்கள், ஜனவரியில் வழங்கப்பட்டன.அதில், முடிவுகள் வெளியான போது, தேர்ச்சி பெறாத பல மாணவர்களுக்கு, மதிப்பெண் பட்டியலில் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதாக, புகார் எழுந்தது.இதன்படி, தேர்வாணையர், முத்துசாமி தலைமையிலான விசாரணைக்குழு, ஆய்வு நடத்தியது.
அதில், எம்.பில்., மாணவ, மாணவியரில் பலருக்கும், கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டு, முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதன் அடிப்படையில், தினக்கூலி பணியாளர், தாமஸ், தொகுப்பூதிய பணியாளர், சத்தியப்பிரியா ஆகியோர், பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். கடந்த, 15 ஆண்டுகளாக, தேர்வுத்துறையிலேயே தொடர்ந்து பணிபுரிந்து வந்த, செல்வராஜ் என்ற கண்காணிப்பாளரை, பதிவாளர் அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, பல்கலைக்கழக அலுவலர் ஒருவர் கூறியதாவது:கடந்த ஆண்டுகளில், மதிப்பெண்களை முறைகேடாக வழங்கிய வழக்கில், தேர்வாணையர் உள்பட பலரும், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.
இருப்பினும் தொடர்ந்து, அந்த முறைகேடு நடந்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் கூட, கண் துடைப்பாகவே உள்ளது.மதிப்பெண் முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது, போலீசில் புகார் தெரிவிக்கவில்லை. மாறாக, சஸ்பெண்ட், இடமாற்றம் என, பெயரளவில் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன் மூலம், இந்த முறைகேடுகள் வேறு ஆட்களின் மூலம், மீண்டும் தொடர வாய்ப்புள்ளது.அதே போல், மாணவர்களுக்கு இதுபோன்று வழங்கப்பட்ட மதிப்பெண் பட்டியல்களை திரும்ப பெறுவது குறித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தினால், மேலும் பலர் சிக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews

Search This Blog