👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 8807414648
மாநில அளவிலான தொழிற்கல்வி பயிற்றுநர்களுக்கான உண்டு, உறைவிட பயிற்சி முகாம் துவங்கியது.கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அக்ஷயா பொறியியல் கல்லுாரியில், மாநில அளவிலான தொழிற்கல்வி பயிற்றுனர்களுக்கான உண்டு, உறைவிட பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.
முதன்மை கல்வி அலுவலர் அய்யன்ணன் துவக்கி வைத்தார்.கல்வி மாவட்ட அதிகாரிகள் கூறியதாவது:அரசு பள்ளிகளில், இடைநிலை கல்வியுடன், தொழிற்கல்வியை கற்றுத்தரும் வகையில் மொத்தம், 67 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.ஒவ்வொரு பள்ளிகளிலும் மாணவர்கள் தேவைக்கேற்ப, இரண்டு தொழில் கல்வி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. ஒன்பதாம் வகுப்பு முதல், 12ம் வகுப்பு வரை நான்கு ஆண்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
பன்முகத்திறன், வாகனங்கள் சரிபார்ப்பு, ரெடிமேட் ஆடைகள் வடிவமைப்பு, உடல்நலம் மற்றும் அழகு, வேளாண்மை, மின்னணுவியல் சார்ந்த பயிற்சி என ஐந்து தலைப்புகளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. பயிற்சி முகாம் முடிந்ததும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.இந்த பயிற்சி வகுப்புகளை நடத்த பள்ளிக்கு இரண்டு பயிற்றுனர்கள் வீதம் மொத்தம், 134 பேர் உள்ளனர்.
இவர்களுக்கான ஐந்து நாட்கள் உண்டு, உறைவிட பயிற்சி முகாம் தற்போது துவங்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு நாட்கள் தொழிற்கல்வி பயிற்சி; மூன்றாவது நாள் வேலைவாய்ப்பு கருத்தரங்கம், மற்ற இரண்டு நாட்கள் நேரிடையாக தொழிற்சாலைகளுக்கு கள ஆய்வுக்கு செல்லுதல் என பயிற்சி அளிக்கப்படுகிறது.இவ்வாறு, கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்