கவர்னர் மாளிகையில் தயாரிக்கப்படும் இயற்கை உரம், பள்ளிகளுக்கு வினியோகிக்கப்படும்,'' என, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார். உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, பள்ளிக் கல்வித் துறை சார்பில், சென்னை, வியாசர்பாடியில் உள்ள, மகாகவி பாரதி நகர், அரசு மேல்நிலைப் பள்ளியில், மரக்கன்று நடும் விழா நடந்தது. இதில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், மரக்கன்றுகளை நட்டு, ஆசிரியர்களுக்கு இலவச மரக்கன்றுகளை வழங்கினார்.
கவர்னர் பேசியதாவது
நம் முன்னோர், 5,000 ஆண்டுகளாக, இயற்கை வளத்தை, நிலையாக பாதுகாத்து வந்தனர். நாகரிக வளர்ச்சி, விவசாய வளர்ச்சி இருந்தது. அவர்களின் தேவைகள் குறைவாக இருந்ததால், நிறைவான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். 200 ஆண்டுகளாக, தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து உள்ளது. பெட்ரோல், பிளாஸ்டிக், ரசாயன பொருட்களால், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல், நம் வளர்ச்சி இருக்க வேண்டும்.
Kaninikkalvi.blogspot.com
மனிதனிடம் கருணை, மனிதாபிமானம் வளர வேண்டும். தமிழகத்தில், பொங்கல்; பீஹாரில், சாத்; ஹரித்துவாரில், கங்கை ஆர்த்தி என, பல மாநிலங்களில், இயற்கைக்கு நன்றி கூறும் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. நம் முன்னோர்கள், இயற்கையை பாதுகாத்து, நம்மிடம் கொடுத்து சென்றுள்ளனர். வரும் சந்ததியருக்கு, நாம், இயற்கையை பாதுகாத்து கொடுக்க வேண்டும். வாழ பழக வேண்டும்இயற்கையை சமநிலையாக வைத்துக் கொள்ள வேண்டும். அது, நம் கடமை. கவர்னர் மாளிகையில், இதை பின்பற்றுகிறோம். மின்சாரத்தை சேமிப்பதற்காக, தேவையில்லாத நேரங்களில், மின் விளக்கு, மின் விசிறி போன்றவற்றை நிறுத்தி விடுகிறோம். மரங்களில் இருந்து, ஏராளமான இலைகள் உதிர்ந்து விழுகின்றன. அவற்றை சேகரித்து, இயற்கை உரம் தயாரிக்கிறோம். அந்த உரத்தை, பள்ளிகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். இயற்கை உரத்தின் அவசியத்தை, மாணவர்கள் அறிந்து கொள்வதற்காக, இதை செய்ய உள்ளோம். அனைவரும் இயற்கையோடு இணைந்து, வாழப் பழக வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பேசியதாவது
மாணவர்கள், தங்களை சுற்றியுள்ள இடத்தை, துாய்மையாக, சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். காகிதம் பயன்பாட்டை குறைக்க வேண்டும். காகிதம், மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. அதிக காகிதம் பயன்படுத்துவது, மரத்தை அழிப்பதற்கு சமம் மரங்களை காக்க, காகிதம் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.