சென்னைப் பல்கலைக்கழகத்தில் பூட்டிய அறைக்குள் 120 இரும்புப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய மாணவர்களின் விடைத்தாள்கள் மாயமான விவகாரம் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனம் சார்பில் ஆந்திரம், மும்பை போன்ற வெளி மாநில மையங்களில் நடத்தப்பட்ட தேர்வில் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்ட விவகாரம் அண்மையில் மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, இந்த முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களின் விடைத்தாள்கள் அனைத்தும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்துக்கு அருகில் உள்ள அறையில் 120 இரும்புப் பெட்டிகளில் வைக்கப்பட்டு பூட்டு போட்டு பத்திரப்படுத்தி வைக்கப்பட்டன. பின்னர், இந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்காக பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் அந்த அறையைத் திறந்தபோது, 120 பெட்டிகளும் மாயமாகியிருப்பது தெரியவந்தது.
இது தொடர்பான செய்தி சென்னைப் பல்கலை.யில் எம்.பி.ஏ. மாணவர்களின் விடைத் தாள்கள் மாயமா' என்ற தலைப்பில் கடந்த மார்ச் 4 ஆம் தேதி தினமணி'யில் வெளியானது. அதனைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட பல்கலைக்கழகக் குழுவின் முதல் கட்ட விசாரணையின்போது, பல்கலைக்கழகத்தின் பரபரப்பான நேரத்தில் அனைவரின் கண் முன்னே பெரிய டிரக் மூலம் இந்த 120 பெட்டிகளும் திருடிச் செல்லப்பட்டிருப்பதும், பல்கலைக்கழக ஊழியர்கள் சிலர் இதற்கு உதவியிருப்பதும் தெரியவந்ததாக பேராசிரியர்கள் தெரிவித்தனர். Kaninikkalvi.blogspot.com இந்த விவகாரத்தை பல்கலைக்கழகத்தால் அமைக்கப்பட்ட குழு இதுவரை விசாரித்த வந்த நிலையில், இப்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி கூறியது:
இந்த விடைத்தாள்கள் மாயமானது குறித்து அதைக் கண்டறிந்த உடனேயே அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் இதுவரை விசாரணை மேற்கொண்டு வந்தனர். இப்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது என்றார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.