பள்ளிகளில் மாணவர்களின் உடற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கலாமே.... சுறுசுறுப்பு குறைந்து மனநிலை மாறுவதால்... - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 25, 2018

Comments:0

பள்ளிகளில் மாணவர்களின் உடற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கலாமே.... சுறுசுறுப்பு குறைந்து மனநிலை மாறுவதால்...



விருதுநகர் மாவட்டத்தில், பெரும்பாலான பள்ளிகளில் உடற்கல்விக்கு முக்கியத்துவம்கொடுக்காததால், மாணவர்கள் இறுக்கமான மனநிலையில், சுறுசுறுப்பு குறைந்துவருவதால், உடற்கல்வி வகுப்பில், பல்வேறு விளையாட்டுகளை கற்றுத்தர ஆசிரியர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இட நெருக்கடியில் இயங்குகின்றன.

மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும், பள்ளியின் தரத்தை உயர்த்துவதிலும் குறிக்கோளாக இருப்பர்.பெரும்பாலான பள்ளிகளில் விளையாட்டு மைதானம் இருப்பதில்லை. இருந்தாலும் அவற்றை பராமரிப்பது கிடையாது. உடற்கல்வி ஆசிரியர் இருப்பர். கற்றுத்தர முன்வருவதில்லை. உடற்கல்வி வகுப்பில் ஏதாவது ஒருபாடத்தை நடத்துவர். எப்போதும் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி கூடுதல் சுமைகளை திணிக்கின்றனர். 

இதனால் வாட்டி வதைக்கப்படும் மாணவர்கள் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர். மாணவப் பருவத்தில் கற்றுக் கொடுக்க வேண்டிய விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும்.அறிவு வளர்ச்சிக்கு கல்வி, உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி கட்டாயம் தேவை. தற்போது,போட்டி மனப்பாண்மையால் படிப்பில் அதிக கவனம் செலுத்தி, கூடுதல் மதிப்பெண்கள்எடுத்தால்தான் சிறந்த மாணவர்கள் என பாராட்டுகின்றனர். 

உடல் ரீதியாகபாதிக்கப்படுவார்கள் என்பதை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. சுறுசுறுப்பில்லாமல் தவிக்கும் மாணவர்கள் சிறிது துாரம்கூட நடக்க முடியவில்லை. பள்ளியில்தான்இந்த கொடுமை என்றால் வீட்டிற்கு வந்தாலும் டியூசனுக்கு அனுப்பி வதைப்பதால், உடல் ரீதியாக பாதிக்கின்றனர்.விளையாட வேண்டிய நேரத்தில் விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.kaninikkalvi 

மத்திய அரசு யோகாவிற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. விளையாட்டுடன் யோகாவும் கற்றுத்தரஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.சிவக்குமார், காரியாபட்டி: பெரும்பாலான பள்ளிகளில் விளையாட்டு மைதானம்நன்கொடையாளர்களால் வழங்கப்பட்டது. 

இடமதிப்பு கூடுதல் காரணமாக, நன்கொடையாளர்கள் குறைந்துவிட்டனர். தற்போது, நுாறு சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்களை விளையாட அனுப்புவதில்லை. தற்போதையமாணவர்கள் சுறுசுறுப்பில்லாமல் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். உடற்கல்விக்காக வாங்கப்பட்ட உபகரணங்கள்பெரும்பாலான பள்ளிகளில் பயன்பாடற்று கிடக்கின்றன. கல்வி மட்டும் முக்கியமல்ல, உடல்ஆரோக்கியமும் முக்கியம் என்பதை உணர வேண்டும். 

சிறு வயது முதிர்வை தவிர்க்க, உடற்பயிற்சி அவசியம்என்பதை உணர்ந்து அனைத்து பள்ளிகளிலும் விளையாட்டு மைதானங்களைசீர் செய்து, மைதானம் இல்லாத பள்ளிகளுக்கு மைதானம் ஏற்படுத்தி, உடற்பயிற்சி கற்றுத்தர கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews