அரசு கலைக்கல்லூரியில் காலியாக உள்ள 524 இடங்களுக்கு 2ம் கட்ட கலந்தாய்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 16, 2018

Comments:0

அரசு கலைக்கல்லூரியில் காலியாக உள்ள 524 இடங்களுக்கு 2ம் கட்ட கலந்தாய்வு


சேலம் வின்சென்டில் செயல்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரியில், இளங்கலையில் 19 பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. முதலாம் ஆண்டில் 1,538 இடங்கள் உள்ளன. நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த 13ம் தேதி தொடங்கி ஒவ்வொரு பிரிவாக நடந்தது. 

இதில், 1,014 இடங்களுக்கு சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு பாடப்பிரிவுகளில் 524 இடங்கள் காலியாக உள்ளன. இதனை நிரப்ப வரும் 21ம் தேதி முதல், 2ம் கட்ட கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது. அதன்படி, 21ம் தேதி தொழிற்பிரிவில் படித்த மாணவர்களுக்கும், பிஏ தமிழ் இலக்கியம் ஆங்கில இலக்கியம் படிக்க விரும்புபவர்களுக்கும் கலந்தாய்வு நடக்கிறது. 

தமிழில் 125 முதல் 150 வரை மதிப்பெண் பெற்றவர்களும், ஆங்கிலத்தில் 100 முதல் 125 வரை மதிப்பெண் பெற்றவர்களும் கலந்து கொள்ளலாம். அறிவியல் பிரிவில் 10 பாடங்களில் உள்ள காலியிடங்களுக்கு, 22ம் தேதி கலந்தாய்வு நடக்கிறது. 

அறிவியல் பிரிவில் 350 முதல் 500 வரை மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும். பின்னர் 25ம் தேதி நடக்கும் கலந்தாய்வில், கலைப்பிரிவில் உள்ள 7 பாடங்களுக்கு, 350 முதல் 500 வரை மதிப்பெண் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் சகுந்தலா தெரிவித்துள்ளார்.

👍Join Our WhatsApp Group👇Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews