தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க 17-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கடைசி நாள் எனும் நிலையில், வெள்ளிக்கிழமை வரையிலும் 31,569 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 14 உறுப்பு, 26 இணைப்புக் கல்லூரிகளில் உள்ள வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு - ஊட்டச்சத்து அறிவியல் உள்ளிட்ட 12 பட்டப் படிப்புகளில் உள்ள 3,422 இடங்களுக்கு 2018-19 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறை மே 18-ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
முதல் நாளில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து மாணவ, மாணவிகள் மே 19-ஆம் தேதி முதல் விண்ணப்பித்து வருகின்றனர்.
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி 2 நாள்களே இருக்கும் நிலையில் வெள்ளிக்கிழமை வரையிலும் 47,702 மாணவ, மாணவிகள் விண்ணப்பிப்பதற்காக தங்களது விவரங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கின்றனர். இதில், 31,569 பேர் விண்ணப்பங்களை முழுமையாகப் பூர்த்தி செய்து விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களில், 13,430 ஆண்களும், 18,139 பெண்களும் அடங்குவர். அதிகபட்சமாக பிற்பட்ட வகுப்பினர் 12,106 பேர் விண்ணப்பித்துள்ளனர். மிகவும் பிற்பட்டோரில் 8,481 பேரும், எஸ்.சி.பிரிவினர் 6,573 பேரும் விண்ணப்பங்கள் அனுப்பியுள்ளனர்.
இருப்பினும் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு குறைவான மாணவ, மாணவிகளே விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு இறுதி நாள் வரையிலும் 53,047 மாணவ, மாணவிகள் பதிவு செய்திருந்த நிலையில், அவர்களில் 49,030 மாணவ, மாணவிகள் உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பித்திருந்தனர். அதன்படி இந்த ஆண்டு 18 ஆயிரம் விண்ணப்பங்கள் குறைவாகவே வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் கடந்த ஆண்டு நீட் தேர்வால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அதிக அளவிலான மாணவ, மாணவிகள் வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பித்திருந்ததாகவும், இதற்கு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தற்போதைய விண்ணப்பங்களின் எண்ணிக்கை சராசரியானதுதான் என்றும் பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
விண்ணப்பப் பதிவு முடிவடைந்த பின்னர் விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீடுதாரர்களுக்கு மட்டும் ஜூன் 18 முதல் 20-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. சிறப்புப் பிரிவினர் மட்டுமே ஜூலை 7-ஆம் தேதி நடைபெறும் கலந்தாய்வுக்கு நேரில் வர வேண்டும்.
அதைத் தொடர்ந்து, தரவரிசைப் பட்டியல் ஜூன் 22-ஆம் தேதி வெளியிடப்படும். பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 9-ஆம் தேதி நடைபெறும்.
இந்த ஆண்டு முதல் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலமாகவே நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அவகாசம் நாளையுடன் முடிகிறது.வேளாண் பல்கலையின் கீழ், 14 உறுப்பு கல்லுாரிகள் மற்றும், 26 இணைப்பு கல்லுாரிகள் உள்ளன. இந்த கல்லுாரிகள் மூலம், 12 இளங்கலை பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.
நடப்பு கல்வியாண்டுக்கான இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை மே, 18ம் தேதி துவங்கியது. ஜூன், 17ம் தேதி வரை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.இதுவரை, 47 ஆயிரத்து, 702 விண்ணப்பங்கள் ஆன்லைன் பதிவேற்றம் மூலம் வந்துள்ளன.
இதில், 31 ஆயிரத்து 569 விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இதில், ஆண்கள், 13 ஆயிரத்து 430 பேர், பெண்கள், 18 ஆயிரத்து 139 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த ஆண்டு, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வர வாய்ப்பு இருப்பதாக பல்கலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.