கோவை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவில் கவுன்சிலிங் முறையில் 1,401 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. மீதமுள்ள 8 இடங்களுக்கு வரும் 18ம் தேதி கலந்தாய்வு நடக்கிறது.
கோவை அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ.,தமிழ், ஆங்கில இலக்கியம், பி.காம்., பி.எஸ்.சி., கணிதம் உள்பட மொத்தம் 22 துறைகளில் உள்ளன. இதில், நடப்பாண்டில் கலந்தாய்வின் மூலம் 1,409 இடங்கள் நிரப்பப்படுகிறது. அதன்படி, கலந்தாய்வு கடந்த 6ம் தேதி துவங்கியது. நேற்றும் கலந்தாய்வு நடந்தது.
இந்த கலந்தாய்வின் அடிப்படையில் மொத்தம் 1,401 இடங்கள் நிரம்பியது. மீதம் ஆண்களுக்கு 4 இடங்கள், பெண்களுக்கு 4 இடங்கள் என மொத்தம் 8 இடங்கள் உள்ளன.
அதன்படி, பி.காம். ஐ.பி பாடப்பிரிவில் எஸ்.டி., ஆண் ஒரு இடம், பி.பி.ஏ., எஸ்.டி., ஆண் ஒரு இடம், விலங்கியல் பிரிவில் ஒரு இடம் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் ஒரு ஆண் இடமும், பெண்களுக்கு பி.சி.எம்., பிரிவினருக்கு மட்டும் பி.ஏ டூரிசம், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, புள்ளியியல் துறைகளில் தலா ஒரு இடம் என மொத்தம் 4 இடங்கள் உள்ளன.
இதனால், இந்த பிரிவை சேர்ந்தவர்கள் மட்டும் வரும் 18ம் தேதி நடக்கும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.