Breaking

Saturday, May 19, 2018

இன்ஜி., கவுன்சிலிங்: 84,000 பேர் பதிவு



அண்ணா பல்கலையின், இன்ஜி., கவுன்சிலிங்குக்கு, பிளஸ் 2 தேர்வு முடிவு வந்த மூன்று நாட்களில், 27 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 550க்கு மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கைக்கு, இந்தாண்டு முதல், ஒருங்கிணைந்த ஆன்லைன் கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டுள்ளது

இதில் பங்கேற்க, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மே, 3ல் துவங்கியது. முதல் நாளில், 7,420 பேர் விண்ணப்பித்தனர். மே, 16ல், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின.

 அப்போதிருந்து, விண்ணப்ப பதிவு அதிகரிக்க துவங்கியுள்ளது.தேர்வு முடிவு வந்த மூன்று நாட்களில், 27 ஆயிரத்து, 500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மின்னல் கல்விசெய்தி

 இதுவரை, 84 ஆயிரத்து, 400 பேர் விண்ணப்பித்துள்ளனர். வரும், 30ம் தேதி கடைசி நாள். அதற்குள், 1.75 லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog