பிளஸ் 2 தேர்வில், ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத அரசு பள்ளி தலைமை ஆசிரியர் மீது, துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுஉள்ளது.
கிருஷ்ணகிரி முதன்மை கல்வி அலுவலர், மகேஸ்வரி கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட, மாசிநாயக்கனப்பள்ளி அரசு தெலுங்கு மேல்நிலைப்பள்ளியில், இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வை, 29 மாணவ - மாணவியர் எழுதினர். அவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.
இது குறித்து, பள்ளி தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இப்பள்ளியில், ஆசிரியர்கள் பற்றாக்குறை என்று ஒரு தகவல் வெளியாகி வருகிறது.
அந்த பள்ளிக்கு, தகுதி உள்ள ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நிரந்தர ஆசிரியர்கள் அல்லாமல் முதுகலை ஆசிரியர்கள் சிலரும் பணியில் உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பிற மொழி அரசு மேல்நிலைப் பள்ளிகள் நான்கு உள்ளன. அதில் நல்ல தேர்ச்சி இருந்தும், மாசிநாயக்கனப்பள்ளி, பள்ளியில் மட்டும் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை.
ஓசூர் கல்வி மாவட்டத்தில், தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது. வரும் கல்வி ஆண்டில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.