இதையும் படிக்க | ஏப். 21 முதல் மே 4-ம் தேதி வரை ஜேஇஇ முதல்நிலை தேர்வு - திருத்தப்பட்ட அட்டவணை வெளியீடு
புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெறுதல், பஞ்சப்படி நிலுவையை உடனடியாக வழங்குதல் உட்பட, 13 கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசு ஊழியர்கள், இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இது குறித்து, மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெறுதல்; 18 மாத பஞ்சப்படி நிலுவையை உடனடியாக வழங்குதல்; தபால், ராணுவம், ரயில்வே உள்ளிட்ட துறைகளில் தனியாரை அனுமதிக்க கூடாது; எல்.ஐ.சி., - வங்கி உட்பட, பொதுத் துறைகளை தனியாருக்கு விற்கக் கூடாது என்பது உட்பட, 13 கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 28, 29ல், நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளோம்.இதில், மத்திய அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்பர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.