3 செக்யூரிட்டி அப்டேட் வழங்கிய வாட்ஸ்அப்; ஒரு ஈ கூட நுழைய முடியாது!
வாட்ஸ்அப் நிறுவனம் புதிதாக 3 பாதுகாப்பு அப்டேட்களை வெளியிட்டுள்ளது.
பயனர்களின் பிரைவஸி (User's Privacy) மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் வாட்ஸ்அப் நிறுவனம், நாளுக்கு நாள் புதுப்புது அப்டேட்களை வழங்கி வருகிறது. முன்னதாக ஸ்டேட்டஸ் பாதுகாப்பு குறித்த அப்டேட்டை வழங்கியது. அதன்பின் சமீபத்தில் க்ரூப் அட்மின்களுக்கான அப்டேட்டை வழங்கியது.
இதனைத் தொடர்ந்து தற்போது பயனர்களின் ப்ரைவஸி (User's Privacy) மற்றும் பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்த புதிதாக 3 பாதுகாப்பு அப்டேட்களை வெளியிட்டுள்ளது.
அக்கவுண்ட் ப்ரொடெக்ட், ஆட்டோமேட்டிக் செக்யூரிட்டி கோட்ஸ், டிவைஸ் வெரிஃபிக்கேஷன் என மூன்று பாதுகாப்பு அப்டேட்களை வழங்கியுள்ளது.
அதில் முதலாவதாக அக்கவுண்ட் ப்ரொடெக்ட் (Account Protect) அம்சம், ஒரு புதிய டிவைஸ்க்கு மாற முயற்சிப்பது உண்மையிலேயே நீங்கள்தானா என்பதை உறுதி செய்ய இந்த அம்சம் செயல்படுகிறது.
அதாவது, உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்ட்டை வேறொரு டிவைஸில் யாரேனும் பயன்படுத்த முயற்சி செய்தால், அது குறித்த எச்சரிக்கை உங்களுக்கு கிடைக்கும்.
நீங்கள் அதை மறுக்கும் பட்சத்தில், குறிப்பிட்ட அங்கீகரிக்கப்படாத முயற்சி தடுத்து. அடுத்ததாக, ஆட்டோமேட்டிக் செக்யூரிட்டி கோட்ஸ் (Automatic security codes) அம்சத்தை பொறுத்தவரை, வாட்ஸ்அப்பிற்குள் நடக்கும் உங்களுடைய செயல்பாடுகள் பாதுகாப்பான கனெக்ஷனின் கீழ் நடக்கிறதா என்பதை 'டக்கென்று' சரிபார்க்க அனுமதிக்கும் ஒரு அம்சமாகும். இந்த அம்சத்தை அணுக, என்கிரிப்ஷன் டேப்பின் (Encryption tab) கீழ் உள்ள காண்டாக்ட் இன்ஃபர்மேஷன் (Contact's info) என்கிற அம்சத்தை கிளிக் செய்யவும்.
உடனே உங்களுடைய பெர்சனல் சாட் (Personal Chat) ஆனது செக்யூர்ட் (Secured) ஆக உள்ளதா என்பதை உடனடியாகச் சரிபார்க்கலாம்.
அதேபோல் மூன்றாவது அப்டேட்டான, டிவைஸ் வெரிஃபிக்கேஷன் (Device verification) அம்சம் பற்றி பார்க்கும் பொழுது, இது உங்கள் அக்கவுண்ட்டை அங்கீகரிக்க உதவும். இதுதன்னிச்சையாக செயல்படும் இதற்காக நாம் எதுவும் செய்யவேண்டாம்.
இது, உங்கள் அக்கவுண்ட்டை மால்வேர் அட்டாக்கில் இருந்தும் பாதுகாக்கும். அதேபோல், உங்கள் டிவைஸ் ஹேக் செய்யப்பட்டால் அதுவே சிறப்பான முறையில் அதை மீட்டெடுக்கும்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.