Whatsapp ஐ இனி Internet இல்லாமல் பயன்படுத்தலாம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 28, 2024

Comments:0

Whatsapp ஐ இனி Internet இல்லாமல் பயன்படுத்தலாம்!

Whatsapp ஐ இனி Internet இல்லாமல் பயன்படுத்தலாம்!!!

இணைய இணைப்பின்றி போட்டோ, வீடியோவை பகிரும் அம்சம்: வாட்ஸ்அப்பில் விரைவில் அறிமுகம்

வாட்ஸ்அப்பில் இணைய (இன்டர்நெட்) இணைப்பின்றி போட்டோ, வீடியோ, டாக்குமென்ட் போன்ற மீடியா ஃபைல்களை பயனர்கள் பகிரும் வகையிலான அம்சம் வெகு விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள சக பயனர்களுக்கு இடையே ஃபைல்களை பகிர முடியும் என தெரிகிறது.

வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம்.

பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது குழுக்களாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் இணைய இணைப்பின்றி மீடியா ஃபைல்களை பயனர்கள் பகிரும் அம்சம் விரைவில் அறிமுகமாக உள்ளது.

இந்த அம்சம் ப்ளூடூத் துணையுடன் செயல்படும் என தகவல். ஆஃப்லைன் ஃபைல் ஷேரிங் அம்சத்தை பயனர்கள் அப்டேட் செய்திருந்தால் மட்டுமே ஃபைல்களை அனுப்பவும், பெறவும் முடியும். அதற்கான பர்மிஷனை பயனர்கள் அனுமதி கொடுக்க வேண்டியதும் அவசியம். WhatsApp New Update - இணைய இணைப்பின்றி போட்டோ, வீடியோவை பகிரும் அம்சம்! விரைவில் அறிமுகம்!

இன்டர்நெட் இல்லாமல் இயங்கும் வாட்ஸ் அப்!

புகைப்படம், வீடியோ உள்ளிட்ட DATA வை இண்டர்நெட் இல்லாமலேயே பகிரும் அம்சத்தை வாட்ஸ் அப் விரைவில் கொண்டு வர உள்ளதாக தகவல் இது ப்ளூடூத் மூலமாக இயங்கும் என கூறப்படுகிறது!

இணைய இணைப்பின்றி போட்டோ, வீடியோவை பகிரும் அம்சம்! விரைவில் அறிமுகம்!

வாட்ஸ்அப்பில் இன்டர்நெட் இல்லாமல் போட்டோ, வீடியோ, டாக்குமென்ட் போன்ற மீடியா ஃபைல்களை பயனர்கள் பகிரும் வகையிலான அம்சம் வெகு விரைவில் அறிமுகமாக உள்ளது . வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் விதமாக அவ்வப்போது புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் இணைய இணைப்பின்றி மீடியா ஃபைல்களை பயனர்கள் பகிரும் அம்சம் விரைவில் அறிமுகமாக உள்ளது. வாட்ஸ்அப்பில் இன்டர்நெட் இன்றி போட்டோ, வீடியோ, டாக்குமென்ட் போன்ற மீடியா ஃபைல்களை பயனர்கள் பகிரலாம். இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள சக பயனர்களுக்கு இடையே ஃபைல்களை பகிர முடியும் என தெரிகிறது.


இந்த அம்சம் ப்ளூடூத் துணையுடன் செயல்படும். ஆஃப்லைன் ஃபைல் ஷேரிங் அம்சத்தை பயனர்கள் அப்டேட் செய்திருந்தால் மட்டுமே ஃபைல்களை அனுப்பவும், பெறவும் முடியும்.

அதற்கான பர்மிஷனை பயனர்கள் அனுமதி கொடுக்க வேண்டியதும் அவசியம். விரைவில் இந்த வசதி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் எனக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews