SMC Teachers - அரசுப் பொதுத் தேர்விற்கு (12, 11, 10-ம் வகுப்பு) அகத்தேர்வர், அறை கண்காணிப்பாளர் மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு நியமனம் செய்ய வேண்டுதல்! - SMC Teachers - Request for appointment as an internal examiner, room invigilator and answer sheet corrector for the Government Public Examination (12th, 11th, 10th class)!
அரசுப் பொதுத் தேர்விற்கு (12, 11, 10-ம் வகுப்பு) அகத்தேர்வர், அறை கண்காணிப்பாளர் மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிக்கு நியமனம் செய்ய வேண்டுதல்!
தமிழகம் முழுவதும் அரசு மேனிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக (SMC) தொகுப்பூதிய ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு பணியாற்றி வருகின்றார்கள். மேலும் மாணவர்களை அரசு பொதுத்தேர்விற்கு தயார் செய்து வருகிறார்கள். மாணவர்களின் கல்வி நலன் கருதியும், எங்களது கற்றல் கற்பித்தல் பணி செயல்பாடுகளில் முன்னேற்றம் பெறுவதற்கும், பொதுத்தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகளில் எங்களை பள்ளிக் கல்வித்துறை தேர்வுப்பணிக்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அவ்வாறு பயன்படுத்துவதால் மாணவர்களின் விடைகளுக்கு எவ்வாறு மதிப்பிடுவது என்பதை அறிய எங்களுக்கு ஒரு வாய்ப்பாக அமையும். மேலும் எங்களுக்கு கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் வலுவூட்டும் விதமாகவும் இருக்கும் என்பதை பணிந்து கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு தெரியப்படுத்துகிறோம்.
இப்படிக்கு
(R. சுரேஷ்)
SMC முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.