இன்று அரசுப் பள்ளிகளில் மேலாண்மைக் குழு கூட்டம்
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் வெள்ளிக்கிழமை பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை (அக்.28-ஆம் தேதி) நடைபெறவுள்ளது.
இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி)
கூட்டம் மாதந்தோறும் இறுதி வெள்ளிக்கிழமை நடத்துவதற்கு முடிவாகியுள்ளது.
அதன்படி இந்த மாதத்துக்கான எஸ்எம்சி கூட்டம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை நடத்தப்பட வேண்டும். இதில் பள்ளி வளா்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, கற்றல், கற்பித்தலில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்றம், நலத் திட்டங்களின் செயல்பாடு போன்றவை குறித்து விவாதிக்க வேண்டும்.
அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை நவ.1-ஆம் தேதி நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டங்களில் பகிா்ந்து கொண்டு விவாதித்து தீா்மானங்கள நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கூட்டத்தில் மேலாண்மை குழுவில் உள்ள ஆசிரியா், சமூக ஆா்வலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்க செய்ய வேண்டும்.
அரசின் வழிகாட்டுதல்களின்படி எஸ்எம்சி குழு கட்டம் சிறந்த முறையில் நடத்தப்படுவதை உறுதி செய்து, அதன் விவரங்களை தொகுத்து இயக்குநரகத்துக்கு அறிக்கையாக சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.