கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை அறிவிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 01, 2024

Comments:0

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை அறிவிப்பு.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை அறிவிப்பு.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை - மார்ச் 27 முதல் விண்ணப்பிக்கலாம் .

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றாம் வகுப்புக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு, மார்ச் 27-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி, ஏப்.17-ம் தேதி இரவு 7 மணிக்கு நிறைவடையும்.

மாணவர் சேர்க்கைக்கான முழு விவரங்களையும் www.kvsonlineadmission.kvs.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
சேர்க்கை கோரும் குழந்தையின் குறைந்தபட்ச வயது 2023 மார்ச் 31-ம்தேதியில் 6 ஆக இருக்க வேண்டும்.

மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகள் www.kvsangathan.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

ஒன்றாம் வகுப்பை தொடர்ந்து, காலியிடங்கள் இருந்தால் 2-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு சம்பந்தப்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஏப்.3-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி 12-ம் தேதி மாலை 4 மணிக்கு முடிவடையும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட பள்ளியில் காலியிடங்கள் (2 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகள்) இருந்தால் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews