SC,ST மாணவர்களின் கல்விக் கடன் ரூ.48.95 கோடி தள்ளுபடி - தமிழக அரசு உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 04, 2025

Comments:0

SC,ST மாணவர்களின் கல்விக் கடன் ரூ.48.95 கோடி தள்ளுபடி - தமிழக அரசு உத்தரவு

1349466


எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்விக் கடன் ரூ.48.95 கோடி தள்ளுபடி - தமிழக அரசு உத்தரவு

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடன் ரூ.48.95 கோடியை தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு 1972-1973 முதல் 2002-2003 வரையிலான காலங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் உட்பட அனைத்து படிப்புகளுக்கும் மற்றும் 2003-2004 முதல் 2009-2010 வரையிலான காலங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு கல்விக் கடன்கள் வழங்கப்பட்டது. அந்தக் கல்விக் கடன்களில் ரூ.48.95 கோடி நிலுவைத் தொகையை மாணவர்களிடமிருந்து வசூலிக்க இயலாததன் காரணமாகவும், வசூலிக்க சரியான பதிவேடுகள் மற்றும் விவரங்கள் ஏதும் அலுவலக ஆவணங்களில் இல்லாததாலும், வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண இயலாததாலும், ரூ.48,95 கோடியை சிறப்பினமாக கருதி முழுவதையும் தள்ளுபடி செய்து (Write off proposal) அரசு ஆணையிடுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84602067