சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடும் ஆசிரியர்களை தமிழக அரசு அழைத்துப்பேச வேண்டும். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேண்டுகோள்
தமிழ்நாடு அரசு தொடக்கக்கல்வித்துறையின் கீழ் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 01-06-2009 க்கு முன் நியமிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.11,170/- என்றும் 01.06.2009 க்கு பின்னர் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8000/- எனவும் வழங்கப்பட்டு வருவது சமூக அநீதியாகும். ஒரே பதவி, ஒரே பணி, ஒரே கல்வித்தகுதி என்ற நிலையில் முரண்பட்ட ஊதியத்தை வழங்குவது நியாயமற்றது. மாண்புமிகு முதல்வர் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபொழுது நமது திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை இடைநிலை ஆசிரியர்கள் போராடியபோது போராட்டக்களத்திற்கே நேரில் வந்து வாக்குறுதி கொடுத்தும், கடந்த தேர்தல் அறிக்கையில் 311வது வாக்குறுதியாக உறுதியளித்தும் இடைநிலை ஆசிரியர்களை நம்பவைத்துவிட்டு தற்போது ஆட்சி மூன்றாண்டுகள் முடிவடைய உள்ள தருணத்திலும் கோரிக்கையை நிறைவேற்றாதது ஏற்புடையது அல்ல.
பள்ளியில் ஏழை மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டிய ஆசிரியர்களை 19-02-2024 முதல் வீதியில் நின்று போராடுகின்ற நிலைக்கு தள்ளி வேடிக்கைபார்க்கும் அரசு உடனே நீதிக்காக போராடும் இடைநிலை ஆசிரியர்களை அழைத்துப்பேசாவிட்டால் இதற்கான விளைவை திராவிட மாடல் அரசு சந்திக்க வேண்டி வரும். சமூகநீதி காக்கும் அரசு என மார்தட்டும் தமிழக அரசு உடனே சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். கோரிக்கையை வென்றெடுக்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்டக்களத்தில் துணை நிற்கும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.