TNPSC குருப்-2 நேர்முக தேர்வு சான்றிதழ்களை 27-க்குள் பதிவேற்ற வேண்டும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, January 16, 2024

Comments:0

TNPSC குருப்-2 நேர்முக தேர்வு சான்றிதழ்களை 27-க்குள் பதிவேற்ற வேண்டும்

TNPSC-exam-should-be-postponed-Annamalai


குருப்-2 நேர்முக தேர்வு சான்றிதழ்களை 27-க்குள் பதிவேற்ற வேண்டும்

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

குருப்-2 தேர்வில் (நேர்முகத்தேர்வு பதவிகள்) சான்றிதழ் சரிபார்ப்புக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்ய தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தனர். அவர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் குறைபாடாகபதிவேற்றம் செய்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு இறுதி வாய்ப்பு வழங்கும் வகையில், அவர்கள் விடுபட்ட மற்றும் சரியான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய ஜனவரி 27-ம்தேதி நள்ளிரவு 11.59 மணி வரை இறுதி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இத்தககவல் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள், தேவையான சான்றிதழ்களை ஒருமுறை பதிவு (ஓடிஆர்) வாயிலாக பதிவேற்றம் செய்ய வேண்டும். உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்
Upload%20TNPSC%20Group-2%20Interview%20Certificates%20by%2027

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84689657