பெல் நிறுவனத்தில் திட்ட பொறியாளர் வேலை: கடைசி தேதி: 20.7.2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 15, 2023

Comments:0

பெல் நிறுவனத்தில் திட்ட பொறியாளர் வேலை: கடைசி தேதி: 20.7.2023

பெல் நிறுவனத்தில் திட்ட பொறியாளர் வேலை: 20க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு.

பெங்களூருவில் செயல்பட்டு வரும் பொதுத் துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் நிரப்பப்பட உள்ள திட்ட பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: Project Engineer -I

காலியிடங்கள்: 27 (எலக்ட்ரானிக்ஸ் - 23, மெக்கானிக்கல் - 4)

வயதுவரம்பு: 1.6.2023 தேதியின்படி 32க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: முதல் ஆண்டு மாதம் ரூ.40,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.45,000, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.50,000, நான்காம் ஆண்டு மாதம் ரூ. 55,000.

தகுதி: பொறியில் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் பிஇ, பி.டெக், பி.எஸ்சி முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.  தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இதற்கும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.400. இதனை எஸ்பிஐ வங்கி மூலம் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: www.bel-india.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

The Manager(HR/ADSN,ES&C-QA),  Bharat Electronics Ltd, Jalahalli(P.O), Bangaluru - 560 013

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.7.2023

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews