Breaking

Friday, June 09, 2023

திருத்திய சுற்றறிக்கை - முதன்மைக் கல்வி அலுவலர் - நாள். 09.06.2023

திருத்திய சுற்றறிக்கை - முதன்மைக் கல்வி அலுவலர் - நாள். 09.06.2023

தமிழ்நாடு பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் அறிவுரைப்படி, திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில், 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 14.06.2023ஆம் தேதி அன்றும், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 12.06.2023ஆம் தேதி அன்றும் விடுமுறை முடிந்து பள்ளிகள் மீளத் திறக்கப்பட உள்ளன.

ஆகவே, அனைத்துவகைப் பள்ளிகளும் வளாகம் மற்றும் வகுப்பறைகளைத் தூய்மைப்படுத்தி, பள்ளி திறக்கும் நாளன்றே அனைத்து மாணவர்களுக்கும் விலையில்லா புத்தகம் மற்றும் நோட்டுகள் வழங்கப்பட நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும்,

கீழ்க்கண்ட அறிவுரைகளைப் பின்பற்றி செயல்படுமாறும் அனைத்துவகைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

1.பள்ளி தொடங்கிய முதல் வாரத்தில் புத்தாக்கப் பயிற்சிகள் (Refresher Course) நடத்தப்பட வேண்டும்.

2. போதை விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய பதாகை வைக்கப்பட வேண்டும்.

3. தென்மேற்கு பருவ மழை போன்ற பேரிடர் நேரங்களில் பள்ளியின் சாவியை அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களின் வசம் ஒப்படைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog