உபரி ஆசிரியர்கள் மாறுதல் தொடர்பான பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள் - PDF - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 02, 2023

Comments:0

உபரி ஆசிரியர்கள் மாறுதல் தொடர்பான பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள் - PDF



உபரி ஆசிரியர்கள் மாறுதல் தொடர்பான பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள் ( 29.04.2023 )

உபரி ஆசிரியர்கள் மாறுதல் தொடர்பான பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் அறிவுரைகள்!

தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குநரின் பணியாளர் தொகுதி) செயல்முறைகள் சென்னை 6

ந.க.எண்.054550 / சி3 / இ1 / 2022 நாள். 29.04.2023

பொருள்:

பார்வை:

பள்ளிக்கல்வி - அரசு / நகராட்சி உயர்நிலை / மேல் நிலைப்பள்ளிகளில் 01.08.2022 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்தல்- அறிவுரைகள் வழங்குதல் சார்பு.

1)அரசாணைஎண்.525 பகதுநாள்.29.12.1997

2)அரசாணைஎண்.46 பகதுநாள்.14.5.2004

3)அரசாணை எண்.231 பகதுநாள்.11.8.2010

4)அரசாணை எண்.180 பகதுநாள்.17.7.2012

5)அரசாணைஎண்.217பகது

(5(1)துறைநாள்.20.6.19

6)சென்னை பள்ளிக் கல்வி இணை இயக்குநரின்(ப.தொ) செயல்முறைகள் இதேஎண்ணிட்ட நாள்.06.09.22, 12.9.22

7)சம்மந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துருக்கள்

8) தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்.21243/ சி3/இ2/2023 நாள்.26.04.2023

பார்வை 1 முதல் 5 வரையில் உள்ள அரசாணைகள் பின்பற்றி நடப்புக் கல்வியாண்டில் (2022-23) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து விவரங்கள் பெறப்பட்டுள்ளது.

2) இந்நிலையில் பார்வை-8ல் காணும் செயல்முறைகளில் 2022-23ஆம் ஆண்டிற்கு ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்கள், பதவி உயர்வு மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு சார்பான அரசாணை, வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் காலஅட்டவணை வெளியிடப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் அரசு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு சார்பான கீழ்க்காணும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. 3) மேற்படி அட்டவணையின் அடிப்படையில் வருகின்ற 17.05.2023 அன்று ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு (Surplus Post With Person) பணிநிரவல் கலந்தாய்வு (BT Deployment Counselling) நடைபெறவுள்ளது.

4) ஆசிரியருடன் உபரி எனக் (Surplus Post With Person) கண்டறியப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை இணையத்தில் அதற்கென உள்ள உரிய படிவத்தில் பதிவேற்றம் செய்திட வழிவகை செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

எனவே இவ்விவரங்களை தங்கள் மாவட்டத்திற்கென உள்ள CEO Login Idஐ பயன்படுத்தி ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட (Surplus Post With Person) பட்டதாரி ஆசிரியர்களின் பெயர்களை குறித்தக்காலக்கெடுவிற்குள் பதிவேற்றம் செய்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

5) ஒரு குறிப்பிட்ட பாடத்தில் ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட (Surplus post with person) பட்டதாரி ஆசிரியர் பணிபுரியும் பள்ளியில் அதேப் பாடத்தில் (same subject) பணிபுரியும் மற்றொரு ஆசிரியர் இக்கல்வியாண்டின் இறுதியில் (31.5.2023) வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் நிலையில் இருந்தால் அப்பள்ளியில் ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட பட்டதாரி ஆசிரியரை பணிநிரவலுக்கு உட்படுத்தாமல் தொடர்ந்து அப்பள்ளியிலேயே பணிபுரிய அனுமதித்து விட்டு, ஓய்வு பெறவுள்ள அவ்வாசிரியரை கல்வியாண்டின் இறுதியில் 31.5.2023பிப பணிவிடுவிப்பு செய்யப்பட்டவுடன் அக்காலிப்பணியிடத்தினை ஆணையரின் பொதுத் தொகுப்பிற்கு ஒப்படைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும்.

6) மேலும் இவ்வுபரி பட்டதாரி ஆசிரியர்களை EMIS இணையத்தில் அதற்கென உள்ள உரிய படிவத்தில் பதிவிடும்போது கலம் 7ல் நேரடி நியமனம்/பதவி உயர்வு மூலம் பட்டதாரி ஆசிரியராக ப.க.து. யில் (அதாவது அஉநிப/மேநிபள்ளிகளில்) பணியில் சேர்ந்திருந்தால் பட்டதாரி ஆசிரியர் பதவியில் பணிவரன்முறை தேதியினை குறிப்பிடவேண்டும். அவ்வாறு இல்லாமல் அலகு மாறுதல் (அ) வேறு துறையிலிருந்து பள்ளிக்

கல்வித் துறைக்கு (அஉநிப/மேநிப) பட்டதாரி. ஆசிரியராக மாறுதலில் வந்திருந்தால் அவ்வாசிரியர்களின் கலம்7ல் பணிவரன்முறை தேதியினை குறிப்பிடாமல் பள்ளிக் கல்வித் துறையில் (அஉநிப/மேநிப) அன்னார் பணியில் சேர்ந்த நாளினை குறிப்பிடவேண்டும். மேலும் படிவத்தில் குறிப்பிட்டுள்ளவாறு முன்னுரிமை ஏதும் இருப்பின் அதனை உரிய ஆதாரங்களோடு குறிப்பிடப்பட வேண்டும். இதில் எவ்வித தவறுகளுக்கும் இடமளிக்காமல் செயல்படுமாறும் பின்னர் தவறுகள் ஏதும் கண்டறியப்படின் அதற்கு முழுப்பொறுப்பும் முதன்மைக் கல்வி அலுவலரையே சாரும் எனத் திட்டவட்டமாக அறிவுறுத்தப்படுகிறது. 7) இதனைத் தொடர்ந்து மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட (Surplus Post With Person) பட்டதாரி ஆசிரியர்களை அந்தந்த மாவட்டத்திற்குள் உள்ள நிரப்பத்தகுந்த காலிப்பணியிடம் கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணிநிரவல் (BT Deployment Counselling) மூலம் வருகின்ற 17.05.2023 பட்டதாரி ஆசிரியர்களுக்கு EMIS இணையதள வாயிலாக (Online Counselling) நடைபெறவுள்ளது.

8) நாளது தேதி வரையுள்ள அனைத்து வகையான பட்டதாரி ஆசிரியர் நிரப்பத் தகுந்த காலிப்பணியிடங்கள் (Eligible Vacancy Post as per fixation) விவரங்களையும் EMIS இணையத்தில் சரியாக பதிவேற்றம் செய்திடவேண்டும். மேலும் பட்டதாரி ஆசிரியர் பணியாளர் நிர்ணய அறிக்கையின்படி கூடுதல் தேவை (Need Post) என கண்டறியப்பட்ட அனைத்து பணியிடங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும் எனவும், பணிநிரவல் கலந்தாய்வு நடைபெறும் நாளில் எவ்வித சேர்க்கை / நீக்கம் / திருத்தங்களுக்கு இடமளிக்காமல் மிகத்துல்லியாக காலிப் பணியிட விவரங்களை பதிவேற்றம் செய்திட மீளவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

9) மேலும் ஒரு சில மாவட்டங்களில் ஒரு குறிப்பிட்ட பாடத்தில் உபரி எனக் கண்டறியப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வதற்கு போதுமான அளவிற்கு நிரப்பத் தகுந்த காலிப்பணியிடம் / கூடுதல் தேவை பணியிடங்கள் இல்லாத சூழல் உள்ளதாக அறிய வருகிறது. எனவே இக்குறிப்பிட்ட பாடத்தில் உள்ள காலிப்பணியிடம் / கூடுதல் தேவை பணியிடங்களுக்கு ஏற்றவாறு உபரிப் பட்டதாரி ஆசிரியர்களை (அக்குறிப்பிட்ட பாடத்தில் மாவட்ட அளவில் உள்ள ஒட்டு மொத்த பட்டியலில் பணியில் இளையவர்களை) இணையத்தில் பதிவேற்றம் மேற்கொள்ளப்படவேண்டும்.

உதாரணம்:

i)ஒரு குறிப்பிட்ட பாடத்தில் உபரி எனக் கண்டறியப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்

ii) அக்குறிப்பிட்ட பாடத்தில் நிரப்பத் தகுந்த காலிப் பணியிடம் உள்ளவை

iii) அக்குறிப்பிட்ட பாடத்தில் கூடுதல் பணியிடங்கள் உள்ளவை

iv)ஆக மொத்தம் (Vac + Need) EMIS 10) மேற்காண் உதாரணத்தில் தெரிவித்துள்ளவாறு 20 உபரி பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய அக்குறிப்பிட்ட பாடத்தில் காலிப்பணியிடம் + கூடுதல் தேவை 11 பணியிடங்கள் மட்டுமே உள்ள நிலையில், அக்குறிப்பிட்ட பாடத்தில் மொத்தம் உள்ள 20 உபரி பட்டதாரி ஆசிரியர்களின் பணிவரன்முறை நாளின் அடிப்படையாகக் கொண்டு தயார் செய்யப்பட்டுள்ள ஒட்டு மொத்த மாவட்ட அளவிலான முன்னுரிமைப் பட்டியலின் (Seniority dist wise) அடிப்படையில் வ.எண்.1 முதல் 9 வரையுள்ள மூத்த பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவலுக்கு உட்படுத்தாமல் வ.எண்.10 முதல் 20 வரையுள்ள ( (8+3) 11 காலிப்பணியிடங்களுக்கு மட்டும் உபரிப் பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவலுக்கு உட்படுத்தப்படவேண்டும்.

11) பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வில் தவறாது கலந்து கொள்ள ஏதுவாக உபரி எனக் கண்டறியப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு கலந்தாய்வுக்கு முன்னர் முன்கூட்டியே தகவல் அளித்திட (கலந்தாய்வு நடைபெறும் இடம், நேரம்) தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். மேலும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு அன்று 5 பாடங்கள் (தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல்) ஏற்றவாறு கணினி வசதிகளை ஏற்படுத்திட தயார் நிலையில் இருக்கவேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக ஒரே நேரத்தில் கலந்தாய்வு நடைபெறும் என்பதால் இதில் எவ்வித புகார்களுக்கும் / குழப்பங்களுக்கும் இடமளிக்காமல் கவனமாக செயல்பட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

--பரிப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை (Priority)

12) ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பார்வை-5ல் காணும் அரசாணையின்படி கீழ்க்காணும் இனங்களில் உள்ளவர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்விற்கு முன்னுரிமை (Priority) அளிக்கப்படும். அதற்கான உரிய ஆதாரத்தை EMIS இணையத்தில் பதிவேற்றம் செய்திடவேண்டும்.

மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், டையாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்பவர்கள், இருதய, மூளைகட்டி அறுவை சிகிச்சை செய்தவர்கள், புற்றுநோயாளிகள்

இராணுவத்தில் பணிபுரிபவர்களின் மனைவியர்

விதவைகள் / மனைவியை இழந்தவர்கள் & 40வயதை கடந்த திருமணம் செய்து கொள்ளாத பெண் பணியாளர்கள் & சட்டப்படி விவாகரத்து பெற்ற பெண் ஆசிரியை பணிநிரவலில் விலக்கு 13) இதன் தொடர்ச்சியாக அரசாணை எண். 176 மற்றும் 12ல் தெரிவித்துள்ளவாறு 40% கண்பார்வையற்றவர்கள், 40% மாற்றுத்திறனாளிகள், மற்றும் NCC பொறுப்பில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் எவரேனும் உபரியாக கண்டறியப்பட்டு இருப்பின் அவர்களுக்கு அளித்துவிட்டு அவர்களுக்கு பதிலாக அதே பள்ளியில் அதே பாடத்தில் உள்ள இளையவரை (Next அடுத்த junior) உபரியாக தெரிவு பணிநிரவல் மூலம் மாறுதல் செய்யப்படவேண்டும்.

முறை ஒரு செய்யப்பட்டவர்களை அடுத்த மூன்று கல்வியாண்டுகளுக்கு மீண்டும் பணிநிரவல் செய்யக்கூடாது. மேலும் ஒரு குறிப்பிட்ட பதவியில் / பாடத்தில் உபரி எனக் கண்டறியப்பட்ட பள்ளியில் இளையவருக்கு (Junior) பதிலாக அதேப் பாடத்தில் பணிபுரியும் மூத்த ஆசிரியர் (Senior) எவரேனும் வேறு பள்ளிக்கு பணிநிரவலில் செல்ல விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியரின் மேலொப்பத்துடன் கூடிய உறுதி ஆவணத்தின் அடிப்படையில் பணிநிரவலுக்கு உட்படுத்தலாம்.

14) ஒரு பள்ளியில் ஒரு குறிப்பிட்ட பாடத்தில் ஒரு பட்டதாரி ஆசிரியர் பணியிடம் உபரி எனக் கண்டறியப்பட்டால், அப்பாடத்தில் Station Junior இரு ஆசிரியர்கள் ஒரே தேதியில் ஒரே நேரத்தில் பணியில் சேர்ந்திருந்தால் அவ்விருவர்களில் உபரி ஆசிரியரை கண்டறிய முதலில் பணிவரன்முறை நாளில் எவர் இளையவரோ அவரே பணிநிரவலுக்கு உட்படுத்தப்படுவர். பணிவரன்முறை தேதியும் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் பிறந்த தேதியின் அடிப்படையில் எவர் இளையவரோ அவரே பணிநிரவலுக்கு உட்படுத்தப்படுவார். உண்டான அனைத்து

15)பணிநிரவல் கலந்தாய்விற்கு முன்னேற்பாடுகளையும் (கணினி வசதி (Internet), மின்சார வசதி மற்றும் இதரவைகள்) செய்திடுமாறும், இதில் எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் கலந்தாய்வினை சிறப்பாக நடத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD CoSE - Deployment Counselling Instruction PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews