தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செய்தி வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, March 05, 2023

Comments:0

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செய்தி வெளியீடு

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் செய்தி வெளியீடு

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் SMS சர்வர்கள் டிசம்பர்-2022, ஜனவரி-2023 மற்றும் பிப்ரவரி-2023 முன்பாதி வரை தொழில்நுட்ப காரணங்களால் இயக்கம் தடைபட்டிருந்தது SMS சர்வர்கள் இயக்கம் சரிசெய்யப்பட்டு, 17.02.2023 முதல் நல்லமுறையில் இயங்கி வருகின்றது.

தற்போது SMS சர்வரில், பிப்ரவரி-2023 மாதத்திற்கான சந்தா கட்டண கேட்புத் தொகை மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. SMS சர்வர் இயங்காத டிசம்பர்-2022 மற்றும் ஜனவரி-2023 மாதங்களுக்கு உத்தேச சந்தா கேட்புத் தொகை மட்டும் கடந்த மாதங்களில் வைக்கப்பட்டது. தற்பொழுது, SMS சர்வர் இயங்கத் தொடங்கிவிட்டதால். டிசம்பர்-2022. ஜனவரி -2023 மாதங்களில் ஆபரேட்டர்களால் திருப்பி கொடுக்கப்பட்ட மற்றும் செயல்படாத செட்டாப் பாக்ஸ்களின் சந்தா தொகை. கேட்புத் தொகையிலிருந்து கழிக்கப்பட்டு சரிசெய்யப்பட்டு வருகிறது. இந்த இரண்டு மாதங்களுக்கான இறுதி சந்தா கேட்புத் தொகை மார்ச்-2023 முதல் வாரத்தில் SMS சர்வரில் பதிவேற்றம் செய்யப்படும். மேலும், ஆபரேட்டர்கள் உத்தேச கேட்புத் தொகையின் பேரில் ஏற்கனவே செலுத்திய தொகை அவர்களுடைய SMS சர்வர் Wallet-ல் வரவு வைக்கப்படும். எனவே, செயல்பாட்டில் இருந்த செட்டாப் பாக்ஸ்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் டிசம்பர்-2022 மற்றும் ஜனவரி-2023 சந்தா தொகையானது இறுதி செய்யப்பட்டு. அதில் ஏற்கனவே உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களால் செலுத்திய தொகை போக, மீதத் தொகை மட்டுமே செலுத்த வேண்டும் என தெரிவித்துக் கொள்கிறோம். எனவே, அனைத்து உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களும் தங்களுடைய மேலான ஒத்துழைப்பை தொடர்ந்து வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews