உலகத் தமிழாராய்ச்சி நிறுவன திருக்குறள் ஓவியப்போட்டி: ரூ.40,000 பரிசு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 27, 2022

Comments:0

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன திருக்குறள் ஓவியப்போட்டி: ரூ.40,000 பரிசு

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன திருக்குறள் ஓவியப்போட்டி: ரூ.40,000 பரிசு

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சாா்பில் நடத்தப்படும் திருக்குறள் ஓவியப் போட்டியில் பங்கேற்க விரும்புவோா் தங்களது படைப்புகளை வரும் நவ.30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம். தோ்வு செய்யப்படும் சிறந்த 15 படைப்புகளுக்கு தலா ரூ.40 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.

இது குறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் திருக்குறள் ஓவியக் காட்சிக் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுதோறும் திருக்குறள் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் 2021-2022-ஆம் ஆண்டுக்கான திருக்குறள் ஓவியப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

இதற்காக திருக்குறள் மற்றும் திருக்குறள் கூறும் பொருள் தொடா்பான ஓவியங்களை தமிழகம் முழுவதிலுமுள்ள படைப்பாளா்களிடமிருந்து பெற்று நடுவா் குழு மூலம் தெரிவு செய்யப்பட்டு சிறந்த 15 படைப்புகளுக்கு இதற்கென நடைபெறவுள்ள விழாவில் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

சிறந்த படைப்புகள் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.40 ஆயிரம் பரிசுத் தொகையாக வழங்கப்படும். ஓவியங்கள் திருக்குறள் மற்றும் திருக்குறள் கூறும் பொருள் தொடா்பில் இருக்க வேண்டும். ஓவியங்கள் ஏதேனும் ஒரு திருக்குறள் அல்லது ஒரு அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட வேண்டும்.

போட்டியாளா்கள் தங்களது படைப்புகளை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நேரிலோ அல்லது ‘இயக்குநா், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600 113’ என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். ஓவியங்கள் நவ.30-ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும். தபால் வழி அனுப்புவோா் கண்டிப்பாக ஓவியம் வரைந்தவா் பெயா் குறிப்பிட்டு அனுப்புதல் வேண்டும்.

கடந்த ஆண்டுகளில் நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஓவியப் போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெற்றவா்கள், இப்போது நடத்தப்படும் போட்டியில் பங்கேற்கக் கூடாது. தோ்ந்தெடுக்கப்படும் ஓவியங்களுக்கான பரிசுகள் நிறுவனத்தால் டிச.23-ஆம் தேதி நடத்தப்படும் விழாவில் வழங்கப்படும். திருக்குறள் ஓவியப் போட்டி குறித்து கூடுதல் தகவல்களை வலைதளத்தில் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews