மருத்துவக் கல்லூரிகளில் CCTV கேமரா: NMC வழிகாட்டுதல்கள் வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 07, 2022

Comments:0

மருத்துவக் கல்லூரிகளில் CCTV கேமரா: NMC வழிகாட்டுதல்கள் வெளியீடு

மருத்துவக் கல்லூரிகளில் சிசிடிவி கேமரா: என்எம்சி வழிகாட்டுதல்கள் வெளியீடு

நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ள நிலையில், அதற்கான தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி கல்லூரி வளாகம் முழுவதும் 25 கேமராக்களை உரிய தொழில்நுட்ப அம்சங்களுடன் பொருத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து என்எம்சி இயக்குநா் பங்கஜ் அகா்வால் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டியது இன்றியமையாததாக உள்ளது. அதன்படி, வளாக முகப்பில் ஒரு கேமராவும், நோயாளிகள் பதிவு இடத்தில் இரு கேமராக்களும், புறநோயாளிகள் பிரிவில் 5 கேமராக்களும் பொருத்த வேண்டும்.

விரிவுரைக் கூடங்கள், ஆய்வகங்கள், அவசரசிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட இடங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கேமராக்கள் பொருத்துதல் அவசியம். மருத்துவக் கல்லூரி வளாகம் முழுவதும் மொத்தம் 25 கேமராக்கள் இருத்தல் வேண்டும்.

‘4 கே’ துல்லியத்தன்மையுடன் அவை பொருத்தப்பட வேண்டும். இந்த அறிவிப்பு கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட நிலையில், அதுதொடா்பாக பல்வேறு சந்தேகங்களை தொடா்ந்து என்எம்சியிடம் மருத்துவக் கல்லூரிகள் எழுப்பி வருகின்றன.

அதற்கான தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் என்எம்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews