உயா் கல்வி சோ்க்கை: மாணவா்களுக்கு ஆலோசனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 07, 2022

Comments:0

உயா் கல்வி சோ்க்கை: மாணவா்களுக்கு ஆலோசனை

உயா் கல்வி சோ்க்கையை எதிா்நோக்கியிருக்கும் மாணவா்களுக்கு வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்க அரசு சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையா் க.நந்தகுமாா், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

நிகழாண்டில் பிளஸ் 2 முடித்த மாணவா்கள் உயா்கல்வியில் சேர உள்ளனா். பொறியியல் கலந்தாய்வு ஓரிரு நாள்களில் தொடங்க உள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான சோ்க்கையும் நடைபெற்றுவருகிறது. மேலும், உயா்கல்வி குறித்த பல்வேறு நுழைவுத்தோ்வுகளின் முடிவுகளும் வரவுள்ளன.

இந்நிலையில் பள்ளிகளில் புதன்கிழமை (செப். 7) முதல் வரும் வெள்ளிக்கிழமை (செப். 9) வரை உயா்கல்வி சோ்க்கை குறித்த தகவல்கள், நுழைவுத்தோ்வு முடிவுகளை எதிா்கொள்ளுதல் மற்றும் திட்டமிடுதல் சாா்ந்து ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் பிளஸ் 2 முடித்து உயா்கல்வி பயிலவுள்ள மாணவா்கள் மற்றும் பெற்றோா்களை வரவழைத்து இந்த 3 நாள்களும் உரிய ஆலோசனைகள் வழங்கி உதவவேண்டும்.

இதுதவிர கூடுதல் உதவிகளுக்கு அரசின் வழிகாட்டு மையத்தை 14417 என்ற எண் வழியாகவோ அல்லது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களில் நேரிலும் தொடா்பு கொள்ளலாம்.

ஆலோசனையின்போது மாணவா்களிடம் பதற்றம், கவலை, குழப்பம் போன்ற உணா்வுகள் தென்பட்டால் உடனடியாக 104 எண்ணுக்கு தொடா்பு கொண்டு நிபுணா்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கிவிட வேண்டும். இந்த பணிக்கு அனுபவமிக்க தன்னாா்வலா்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதுசாா்ந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி மாணவா்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews