இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.08.2022 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 27, 2022

Comments:0

இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.08.2022

ஐசிஓஆர் -இன் கீழ் செயல்பட்டு வரும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Senior Research Fellow (SRF) - 01
சம்பளம்: 31,000
தகுதி: Genetics, Plant Breeding, Genetics and Plant Breeding, Biotechnology, Life Science போன்ற பிரிவுகளில் இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்று நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி: Young Professional-II - 01
சம்பளம்: மாதம் ரூ.35,000
தகுதி: Life Science பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Skilles Helper - 01
சம்பளம்: மாதம் ரூ.19,473
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி: Scientific Administration Assistant - 01
சம்பளம்: மாதம் ரூ.18,000
தகுதி: ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.iari.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து haritha.agrico@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.08.2022

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews