'தையல், ஓவியம், உடற்கல்வி பாடவேளைகளில் வகுப்பறையிலேயே மாணவர்களுக்கு யோகா, தியான பயிற்சி அளிக்க வேண்டும்' என, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக செய்தி தொடர்பாளர் முருகேசன் வலியுறுத்தியுள்ளார்.அவர் பள்ளிக் கல்வித்துறைக்கு அனுப்பியுள்ள கடிதம்: உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தையல், ஓவியம், உடற்கல்வி, கணினி கல்வி என நிரந்தர மற்றும் பகுதிநேர பணியிடங்களில் சிறப்பு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பள்ளியில் வழிபாட்டுக்கூட்டம், விளையாட்டு மைதானங்களில் கூடுவதை தவிர்த்தல் போன்ற நெறிமுறைகளை அரசு பிறப்பித்துள்ளது. அவ்வாறே பள்ளிகள் செயல்படுகின்றன.
தற்போதுள்ள கால அட்டவணைப்படி மேற்கண்ட பாடவேளைகள் இல்லை. மாணவர்கள் தொடர்ந்து பாடங்களை மட்டுமே படித்து வருவதால் தொய்வு ஏற்பட்டு, மனஇறுக்கமாக உள்ளனர். வார இறுதிநாட்களில் மாணவர் வருகைகூட குறைந்து விடுகிறது. எனவே இப்பாடவேளைகளில் வகுப்பறையிலேயே யோகா, தியானப்பயிற்சி, நன்னெறி கதைகள் கூறுதல், கைவேலைப்பாடு பயிற்சி அளித்தால் மனஅழுத்தம் குறைந்து புத்துணர்ச்சி பெறுவர். வருகை அதிகரித்து கற்றல், கற்பித்தல் பணி சிறப்பாக அமையும். பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sunday, November 07, 2021
உடற்கல்வி பாடவேளையில் வகுப்பறையில் தியான பயிற்சி: பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.