தமிழ் வழியில் வேளாண் பட்டப்படிப்பு முடித்தால், இட ஒதுக்கீட்டின்படி 20 பேரும், பொதுப்போட்டியில் அதற்கு மேலானோரும் தமிழக வேளாண் துறையில் பணியில் சேர முடியும்' என்று வேளாண் அறிவியல் தமிழ் இயக்கத்தின் தலைவர் முத்தமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு நடப்பாண்டு முதல் தமிழ் வழி வேளாண் பட்டப்படிப்பு தொடங்கும் என்று அறிவித்துள்ளது. தமிழ் வழிக்கல்விக்கான பாடத்திட்டம் எது, இளநிலையில் தமிழில் படித்தவர்கள் முதுநிலையில் எவ்வாறு ஆங்கிலத்தில் படிக்க முடியும், வேலைவாய்ப்பு கிடைக்குமா, போதிய அளவில் தமிழில் நுால்கள் உள்ளனவா என்றும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இது குறித்து வேளாண் அறிவியல் தமிழ் இயக்கத் தலைவர் முத்தமிழ்ச்செல்வன் கூறியதாவது: இந்திய வேளாண் கல்வி வரலாற்றில் முதல் முறையாக, ஒரு மாநில மொழியில் பட்டப்படிப்புகள் இந்த கல்வியாண்டு முதல் வேளாண் பல்கலையில் தொடங்கப்படுகின்றன. இது ஒரு வரலாற்று நிகழ்வு.தமிழ் வழியில் வேளாண் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நிரப்பப்படும் வேளாண் அலுவலர் பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. சராசரியாக ஆண்டுக்கு 100 வேளாண் அலுவலர்களே தேர்வாணையத்தால் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். இட ஒதுக்கீட்டின்படி 20 பேரும், பொதுப்போட்டியில் அதற்கு மேலானோரும் தமிழக அரசு வேளாண் துறையில் பணிக்கு சேர முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.