பள்ளி கட்டிடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 11, 2021

Comments:0

பள்ளி கட்டிடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய உத்தரவு

திரு வண்ணாமலை மாவட் டத்தில் பள்ளி கட்டிடங் களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என கலெக்டர் பா.முரு கேஷ் தெரிவித்தார்.

கலசபாக்கம் ஒன்றியம் மேல்வில்வராயநல்லூர், மேலாராணி ஆகிய கிரா மங்களில் நேற்று நடந்த 5ம் கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்புமுகாமை கலெக்டர் பா.முருகேஷ், எம்எல்ஏ பெ.சு.தி.சரவ ணன், கூடுதல் கலெக்டர் மு.பிரதாப் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர், கலெக்டர் பா.முருகேஷ் கூறுகை யில், 'வரும் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க உள்ளதால், பள்ளி கட் டிடங்களின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்யவும், சேதம டைந்து ஆபத்தான நிலை யில் உள்ள பள்ளி கட்டிடங்களை அகற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பாடகம் கிரா மத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற நடவ டிக்கை எடுக்கப்படும்' என்றார். இதைத்தொடர்ந்து, கலசபாக்கம் ஒன்றியம் லாடவரம், பாடகம், காப்பலூர், சீட்டம் பட்டு, சிறுவள்ளூர், கேட்டவரம்பாளையம் உள்ளிட்ட 25 கிராமங்க ளில் நடந்த கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை எம்எல்ஏ பெ.சு.தி.சரவ ணன் ஆய்வு செய்தார்.அப்போது, ஒன்றியக் குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், தாசில் தார் ஜெகதீசன், பிடிஓ லட்சுமி, எழிலரசு, வட் டார மருத்துவ அலுவலர் கவு தம்ராம், மாவட்ட கவுன்சிலர் பட்டம்மாள் முனுசாமி, முன்னாள் ஊராட்சி தலைவர் அ.சிவ குமார், முன் னாள் மாவட்ட கவுன்சி லர் க.சுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர்கள் மஞ்சுளா சுதாகர், பிச் சாண்டி, முனியாண்டி உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews