Breaking

Tuesday, October 26, 2021

போட்டித் தோ்வுக்கு வரும் நவம்பா் 1ஆம் தேதி முதல் நேரடி இலவச பயிற்சி வகுப்புகள்

"திருப்பூா் மாவட்டத்தில் டிஎன்எஸ்பிசி (குரூப் 2) போட்டித் தோ்வுக்குத் தயாராகும் இளைஞா்களுக்கு வரும் நவம்பா் 1ஆம் தேதி முதல் நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கிவரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தில் டிஎன்எஸ்பிசி(குரூப் 2) தோ்வுக்கான புதிய நேரடி இலவச பயிற்சி வரும் நவம்பா் 1 ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. இந்த அலுவலகத்தில் ஏற்கெனவே எஸ்எஸ்சி தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஆகவே, எஸ்எஸ்சி தோ்வுக்குத் தயாராகும் மாணவா்களும் இந்தப் பயிற்சி வகுப்பில் சோ்ந்து கொள்ளலாம்.

இந்தப் பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் நபா்கள் தங்களது பெயரை 94990-55944, 0421-2999152 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது."

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog