தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு (NCSC) - வழிகாட்டி ஆசிரியர்கள் பயிற்சி - சார்பாக - முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலர் செயல்முறைகள் : நாள்: 08.09.21 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 08, 2021

Comments:0

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு (NCSC) - வழிகாட்டி ஆசிரியர்கள் பயிற்சி - சார்பாக - முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலர் செயல்முறைகள் : நாள்: 08.09.21

மத்திய அரசின் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பரிமாற்ற குழுமம் (NCSTC) மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறை (DST). உதவியுடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் (TNSF) ஒருங்கிணைப்பில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு, அறிவியல் ஆர்வமூட்டி, அவர்களை குழந்தை விஞ்ஞசானிகளாக மாற்றும் நோக்குடன் தேசிய அளவில் குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்தி வருகிறது.

2021-2022ஆம் கல்வியாண்டில் தேசிய குழந்தைகள். அறிவியல் மாநாட்டிற்கு "நிலைப்புரு வாழ்விற்கான அறிவியல்" (Science for Sustainable living) என்ற தலைப்பில் மாணவர்கள் ஆய்வறிக்கை (Project Report) சமர்ப்பிக்க வேண்டும். இதன் வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி 09.09.2021 வியாழன் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நாகர்கோவில், ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் வைத்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் அனைத்து பள்ளிகளிலிருந்தும் குறைந்தது ஒரு ஆசிரியர் பங்கேற்க நடவடிக்கை எடுக்க அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், ஒவ்வொரு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலிருந்தும் குறைந்தது ஒரு ஆய்வு கட்டுரை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்ய அனைத்து பள்ளித் தலைமையாசிரியர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
IMG_20210908_165944

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews