Breaking

Thursday, September 09, 2021

முறைகேடாக ஆசிரியர்கள் பணியிட மாற்றம் - உள்துறை, பள்ளி கல்வித்துறை செயலாளர்கள் பதில் அளிக்க உத்தரவு

அதிமுக ஆட்சியில் முறை கே டாக ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டது குறித்து ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற் கொள்ள கோரிய வழக்கில், உள்துறை, பள்ளி கல்வித்துறை செய லாளர்கள் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த ரமேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:

ஆசிரியர்கள் இடமாற் றம் தொடர்பாக கலந் தாய்வை தமிழக அரசு நடத்தி வருகிறது. நிர்வா கத்தின் அடிப்படையிலும்,ஆசிரியர்கள் இடமாற்றம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு முறை கேடுகள் நடைபெ றுகிறது. இதன் மூலம் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. இதுதொடர்பாக ஐகோர்ட் கிளை யில் வழக்கு தொட ரப்பட்டு, 2019ல் பல்வேறு வழிகாட்டுதல்கள் உத்த ரவு கொடுக்கப்பட்டுள் ளது.

2020-2021ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஆசி ரியர்கள் பணியிட மாற் றம் சம்பந்தமான கலந் தாய்வு நடைபெறவில்லை. ஆனால், நிர்வாக அடிப்ப டையில் முறைகேடாக பல ஆசிரியர்கள் பணி யிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். எனவே தமிழ் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்க ளிலும் நிர்வாக அடிப்ப டையில் பணியிட மாற்றம் செய்தஆசிரியர்கள் குறித்து ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப் புத்துறை விசாரணை மேற் கொள்ள வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறி யிருந்தார். இந்த மனு நீதிபதிகள் துரைசுவாமி, முரளிசங்கர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசுத்தரப்பில், "2020 2021ம் ஆண்டு ஆசிரியர்கள் பணியிட மாற்றம் குறித்த கலந்தாய்வு நடைபெற வில்லை" என தெரிவிக்கப் பட்டது. இதனையடுத்து நீதிப திகள், வழக்கு குறித்து உள்துறைச் செயலாளர், பள்ளிகல்வித்துறைச் செய லாளர் பதில் மனு தாக் கல் செய்ய உத்தரவிட்டு. விசாரணையை அக். 27ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog