46 மாணவ, மாணவியருக்கு கொரோனா தொற்று - கோவையில் செப். 17 முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 15, 2021

Comments:0

46 மாணவ, மாணவியருக்கு கொரோனா தொற்று - கோவையில் செப். 17 முதல் கூடுதல் கட்டுப்பாடுகள்

IMG_20210915_220939
IMG_20210915_220959
கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகள் 46 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் சரவணம் பட்டி பகுதியில் உள்ள தனியார் நர்சிங்கல்லூரியில் பயின்று வந்த கேரள மாணவர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுடன் தொடர்பில் இருந்து வந்த மாணவ, மாணவியர்கள் 46 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டது.


இதனை தொடர்ந்து கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதுடன், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள கொரோனா முகாமில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து மாவட்ட கலெக்டர் தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:


மாவட்டத்தில் முதல் டோஸ் தடுப்பூசி 82 சதவீதம் பேருக்கு போடப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வரும் 17 ம் தேதி முதல் தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. மால்களுக்குதடை


கோவையில் மால்கள் திரையங்குகள், பூங்காக்கள் உள்ளிட்டவை ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்குவதற்கு தடை விதிக்கப்படுகிறது. ஞாயிற்றுகிழமைகளில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் இயங்குவதற்கு தடை விதிக்கப்படுகிறது.


தடுப்பூசி கட்டாயம்


செப்.,20 ம் தேதி முதல் அனைத்து மால்கள் நகைகடைகள், துணிகடைகள் உள்ளிட்ட இதர கடை ஊழியர்கள் இரண்டு தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். உணவகங்கள் பேக்கரிகள் உள்ளிட்டவைகளில் ஞாயிற்று கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பார்ச்சல்களுக்கு மட்டும் அனுமதி. சந்தைகளுக்கு கட்டுப்பாடு


உழவர் சந்தைகள் 50 சதவீத கடைகளுடன் சுழற்சி முறையில்இயங்க அனுமதிக்கப்படும். பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்ளூர் வாடிக்கையாளர்களை கொண்டு இயங்க அனுமதிக்கப்படும். சந்தைகளில் வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில வியாபாரிகள் கலந்து கொள்ளாமல் இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த கட்டுப்பாடுகள் நாளை மறுநாள் (செப்.17) முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவையில் உள்ள தனியார் செவிலியர் கல்லூரியில் 2 நாள்களில் 48 மாணவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளத்தில் இருந்து வந்த 4 மாணவர்களுக்கு கரோனா இருந்த நிலையில், பிற மாணவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இதையடுத்து கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


உணவகங்கள், பேக்கரி கடைகளில் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சலுக்கு மட்டும் அனுமதி.


உழவர் சந்தைகளில் 50 சதவிகிதம் கடைகளுக்கு மேல் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


வணிக வளாகங்கள், உணவகங்கள், துணிக்கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.


கோவை மாவட்டத்தில் 82 சதவிகிதம் பேருக்கு மேல் முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84631305