கல்விக் கட்டண நிர்ணயம்: தனியார் பள்ளிகள் செப்.30-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 25, 2021

Comments:0

கல்விக் கட்டண நிர்ணயம்: தனியார் பள்ளிகள் செப்.30-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

கல்விக் கட்டண நிர்ணய விண்ணப்பங்களை தனியார் பள்ளிகள் செப்.30-க்குள் சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தனியார் பள்ளிளுக்கான கல்விக் கட்டணங்களை முறைப்படுத்துவதற்காக தமிழகஅரசு சார்பில் கல்விக் கட்டணநிர்ணயக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பாலசுப்ரமணியன் பொறுப்பேற்றுள்ளார். அதைத் தொடர்ந்து, தனியார் பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்வதற்குரிய பரிந்துரை விண்ணப்பங்களை தனியார் பள்ளிகள் செப்.1-ம் தேதிக்குள் பதிவேற்ற அவகாசம் வழங்கப்பட்டது. பின்னர் கரோனா பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான அவகாசம் செப். 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.


1,700 பள்ளிகள் தாக்கல்


ஆனால், இதுவரை 1,700 பள்ளிகளே முழுமையான ஆவணங்களுடன் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.


எனவே, அனைத்து தனியார் பள்ளிகளும் tnfeecommittee.com என்ற இணையதளத்தில்தங்கள் விண்ணப்பங்களை கடந்த கல்வி ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கையுடன் துரிதமாக சமர்ப்பிக்க வேண்டும் என்று கட்டண நிர்ணயக் குழு அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews