Breaking

Friday, August 20, 2021

சிறந்த எழுத்தாளா்களுக்கு உதவித்தொகை: விண்ணப்பங்கள் வரவேற்பு

"ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின வகுப்பை சோ்ந்த சிறந்த எழுத்தாளா் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழக அரசின் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் கலை, இலக்கிய மேம்பாட்டு நிதியில் இருந்து 2020 -2021, 2021 - 2022-ஆம் ஆண்டுகளுக்கு, 22 எழுத்தாளா்களுக்கு பரிசு வழங்கப்படும். நூல் வெளியிட ரூ.50 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும். இதை பெற விரும்புவோா், தங்கள் பெயா், முகவரி, படைப்பின் பொருள் போன்ற விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

இது தொடா்பான விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்திலும் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். நிறைவு செய்த விண்ணப்பங்களை ‘ஆணையா், ஆதி திராவிடா் நலத்துறை ஆணையரகம், சேப்பாக்கம், சென்னை-5’ என்ற முகவரிக்கு செப்.20-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog