கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பொது விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்றான ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 21) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பொது விடுமுறை
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் ஓணம் பண்டிகை இந்த ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அதாவது கேரளா மக்களின் பாரம்பரிய திருவிழாவில் முக்கியமானதாக கருதப்படும் ஓணம் திருவிழா நாளை (ஆகஸ்ட் 21) துவங்க உள்ளது. இது இந்து புராணங்களிலிருக்கும் ஓணம் மன்னர் மகாபலியை நினைவு கூர்ந்து கொண்டாடப்படும் விழாவாகும். இவ்விழாவில் பாரம்பரிய உடை அணிதல், பூக்கோலம் இடுதல், கதகளி, புலியாட்டம் போன்றவை முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. அந்த வகையில் கேரளா மாநிலத்தில் சமீப காலமாக கொரோனா நோய் தொற்று பெருகி வந்துகொண்டிப்பதால் இந்த பண்டிகையை முறையான கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் படி நாளை (ஆகஸ்ட் 21) ஓணம் சிறப்பு தினத்தை முன்னிட்டு கேரளாவின் எல்லையில் அமைந்துள்ள தமிழக மாவட்டமான கன்னியாகுமரியில் சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதாவது கன்னியாகுமரி பகுதிகளிலும் இந்த ஓணம் பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி பகுதி மக்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் பொருட்டு செப்டம்பர் 11 ஆம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.