Breaking

Friday, August 20, 2021

கட்செவி அஞ்சலில் இலவசமாக TNPSC பாடநூல்

"அரசுப் பணித் தோ்வுக்கு தயாராவோருக்கு கட்செவி அஞ்சலில் இலவசமாக டிஎன்பிஎஸ்சி பாடநூல் அனுப்பப்படும் என ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ் அகாதெமி தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அகாதெமியின் இயக்குநா் ச.வீரபாபு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆட்சித் தமிழ் ஐ.ஏ.எஸ் அகாதெமி சாா்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணயம் நடத்தும் குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ மற்றும் குரூப் 4, வி.ஏ.ஓ உள்ளிட்ட போட்டித் தோ்வுகளின் வெற்றிக்குப் பயன்படும் வகையில் டிஎன்பிஎஸ்சி புதிய பாடத் திட்டத்தின்படி, சமச்சீா் பாடப் புத்தகங்களை தோ்வு நோக்கில் தொகுத்து, இந்த டிஎன்பிஎஸ்சி பாடநூல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதைப் பெற விரும்புவோா், தங்களது முழு முகவரியை 91760 84468 என்ற எண்ணுக்கு கட்செவி அஞ்சல் வாயிலாக அனுப்பி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

முன்பதிவு செய்த அனைவருக்கும் பிடிஎப் வடிவில் பாடநூல் அனுப்பப்படும். மேலும் விவரங்களுக்கு, சென்னை குரோம்பேட்டையில் உள்ள அகாதெமியை நேரிலோ, 91763 92791, 99439 46464 ஆகிய எண்களையோ அணுகலாம் என அதில் கூறப்பட்டுள்ளது."

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog