தமிழகத்தில் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் நீட் தேர்வில் இருந்து விலக்கு என்பதே அரசின் நிலைப்பாடு என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு :
இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர மத்திய அரசால் நீட் என்னும் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நுழைவுத்தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்றும் தமிழக மாணவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும் முக ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். அதன்படி நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனாலும் மத்திய அரசு தமிழக அரசின் கோரிக்கையை ஏற்கவில்லை. வரும் செப்டம்பர் 12ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ளது. அதற்கான விண்ணப்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும் இந்த ஆண்டு நீட் தேர்வு வினாத்தாள்களும் மாற்றம் செய்யப்பட்டு தேர்வு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் சென்னை நூலக சங்க நூலகர்களுக்கு விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழகத்தில் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு என்பதே அரசின் நிலைப்பாடு என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் பட்சத்தில், 50 சதவீத மாணவர்களை கொண்டு செயல்பட திட்டமிட்டுள்ளதாகவும், பள்ளிகள் திறப்பின் போது மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆசிரியர்களும் மாணவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.