தமிழக அரசு கல்லூரி பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கல் – மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 12, 2021

Comments:0

தமிழக அரசு கல்லூரி பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கல் – மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பல்கலைக்கழகங்களில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட 41 கல்லூரிகளின் ஊதியத்தை தமிழக அரசே வழங்க வேண்டும் என மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

நிதி நெருக்கடி:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பல்கலைக்கழகங்களில் ஊதியம் வழங்க முடியாத அளவு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் பல்கலைக்கழகங்கள் நிதி நெருக்கடியை சமாளிக்க எந்த வழியும் இல்லை. எனவே தமிழக அரசிடம் முக்கிய அறிவிப்பை மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அதன் படி, பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட 41 கல்லூரிகளில் பணியாற்றுவோரின் ஊதியத்தை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களே வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் ஆணை பெரும் விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. பல்கலைக்கழகங்களிடம் நிதி இல்லாத சூழலில், 41 அரசு கல்லூரிகளின் பணியாளர்களுக்கு இனி ஊதியம் கிடைக்குமா? என்ற ஐயம் எழுந்திருக்கிறது. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் அனைத்தும் நிதி நெருக்கடியில் உள்ளது.

இந்த நேரத்தில் ஊதிய சுமையை ஏற்றுக்கொள்ள அவை தயாராக இல்லை. தமிழகத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் தான் அதிகபட்சமாக 10 உறுப்புக்கல்லூரிகளை நடத்தி வந்தது. அவை அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டு விட்ட நிலையில், இப்போது அக்கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் இதர ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டுமானால் மாதத்திற்கு ரூ.1.51 கோடி தேவைப்படும். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க ஆகஸ்ட் மாதத்திற்கு மட்டும் ரூ.8.93 கோடி தேவைப்படும். ஆனால், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருப்பு உள்ள தொகை ரூ.6.52 கோடி மட்டும் தான். அதனால் 10 அரசு கல்லூரிகளின் பணியாளர்களுக்கு தங்களால் ஊதியம் வழங்க முடியாது. இதுகுறித்து பாரதிதாசன் பல்கலைக்கழக பதிவாளர் தமிழக அரசிற்கு அதிகாரபூர்வ கடிதம் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews