ஈரோடு மக்கள் கவனத்திற்கு - மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 08, 2021

Comments:0

ஈரோடு மக்கள் கவனத்திற்கு - மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவிப்பு

கொரோனா பெருந்தொற்று நோயினை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஊரடங்கு 23.08.2021 அன்று காலை 6.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சமீப காலங்களில் ஒரு சில மாவட்டங்களில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், மக்களின் வாழ்வாதார பாதிப்புகளை கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட தளர்வுகள் தவறாக பயன்படுத்தப்படாமல் கண்காணித்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல்துறை அலுவலர்கள் ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை உரிய முறையில் நடைமுறைப்படுத்தி கொரோனா மூன்றாம் அலை தொற்றுப்பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஈரோடு மாவட்டத்தில் கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள் 09.08.2021 முதல் விதிக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அத்தியாவசிய கடைகளான பால் மற்றும் மருந்தகம் தவிர அனைத்து மளிகை கடைகள், காய்கறிகடைகள், அடுமனைகள் (Bakery) உள்ளிட்ட பிற கடைகள் அனைத்தும் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.

> மாவட்டத்திலுள்ள உணவகங்கள் அனைத்திலும் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மட்டுமே 50% வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படுகிறது. மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தேனீர் கடைகளும் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

திருமணம் நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மிகாமலும், ஈமச்சடங்குகளில் நபர்களுக்கு மிகாமலும் கலந்துகொள்ள அனுமதியளிக்கப்படுகிறது. > மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப்பகுதிகளில் இயங்கும் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு திறந்தவெளியில் தனித்தனி கடைகளாக பிரித்து விற்பனை செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து பூங்காக்கள், சுற்றுலாத்தலங்கள் மற்றும் அருங்காட்சியகங்களில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் பொதுமக்கள் வருகைக்கு தடை விதிக்கப்படுகிறது.

> கர்நாடகா - தமிழ்நாடு மாநில எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேற்படி சோதனைச் சாவடி வழியாக ஈரோடு மாவட்டத்திற்குள் வரும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட RT PCR பரிசோதனை சான்றிதழ் (Negative Certificate) அல்லது கொரோனா தடுப்பூசிகள் இல்லையெனில் சோதனைச்சாவடியிலேயே RT-PCR பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

> ஈரோடு மாவட்டத்தில் வாரச்சந்தைகள், தினசரி சந்தைகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது மற்றும் கொரோனா தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

> பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள கீழ்க்காணும் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் இயங்கும் பால், மருந்தகம், மளிகைகடை, காய்கறிக்கடைகள், உணவகங்கள் ஆகியவை தவிர பிற கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க முழுமையாக தடை விதிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews