பத்திரிக்கைச் செய்தி
தமிழக அரசால் கொரோனா பெருந்தொற்று நோயினை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரசாணை நிலை எண்.504 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை நாள்:07.08.2021 -ன்படி தற்போது கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு 09.08.2021 காலை 6.00 மணி முதல் 23.08.2021 காலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
09.08.2021 முதல் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டுத்தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் தமிழக அரசால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 02.08.2021 மற்றும் 04.08.2021 முதல் மளிகை கடைகள், காய்கறி கடைகள், அடுமனைகள், டீ கடைகள், மீன் மற்றும் இறைச்சிக் கடைகள், மதுபான கடைகள் (TASMAC), உணவகங்கள் ஆகியவற்றிற்கு நடைமுறைபடுத்தப்பட்ட நேர கட்டுபாடுகளும் மேலும் மால்கள், பன்னடுக்கு வணிக வளாகங்கள், பூங்காக்கள் மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, காந்திபுரம் 5,6,7வது தெருக்கள், ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை (ராயல் நகர் சந்திப்பு), ரைஸ் மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, எல்லை தோட்ட சந்திப்பு, துடியலூர் சந்திப்பு, ஆகிய தெருக்களில் இயங்கும் அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் ஆகியவற்றிற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க விதிக்கப்பட்ட தடைகளும் நீடிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்திடும் நோக்கில் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொது மக்கள் அனைவரும் முறையாக பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மாவட்ட ஆட்சித்தலைவர்
கோயம்புத்தூர்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.