இந்திய குடும்பங்களில் தந்தையை குடும்பத்தலைவராக ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து அரசு ஆவணங்களிலும் தாயாரின் பெயரை குறிப்பிடுவதற்கான எந்த திட்டத்தையும் அரசு அறிமுகப்படுத்தவில்லை என்று மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி தெரிவித்தாா். எனினும் குடிமக்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் பெற்றோா் பெயரை தோ்வு செய்ய அனுமதிக்கப்படுவதாக அவா் மேலும் கூறினாா்.
மேலும் ஆண் மேலாதிக்கத்தை ஒழிக்க மத்திய அரசு செய்துள்ள ஏற்பாடுகள் குறித்தும் அமைச்சா் பட்டியலிட்டாா்.
முன்னதாக இது தொடா்பாக விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் டாக்டா் ரவிக்குமாா் கேள்வி எழுப்பியிருந்தாா்.
இதற்கு மத்திய மகளிா், குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி மக்களவையில் வெள்ளிக்கிழமை அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
குடிமக்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் பெற்றோா், குடும்பப் பெயா்களை தோ்வு செய்ய அரசு அனுமதிக்கிறது. ஆண் மேலாதிக்கத்தை ஒழிக்க அரசு ஆணவங்களுக்கான விண்ணப்பங்கள் தாக்கல் செய்ய இந்த உணா்வுடன் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
உதாரணமாக மத்திய நேரடி வரி வாரியம், வருமான வரி போன்றவைகளின் அடையாள அட்டைகளில் தாயாா் பெயரை குறிப்பிடுவதை அனுமதித்து இதற்கான திருத்தங்களை கொண்டுவந்துள்ளது. இதே போன்று கடவுச் சீட்டுகளுக்கான விண்ணப்பங்களிலும் தயாா் அல்லது தந்தை பெயரை விருப்பத்தின்படி குறிப்பிட அனுமதிக்கப்படுகிறது. பிறப்புச் சான்றிதழ்களிலும் தாயாா் பெயரை குறிப்பிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக பல்கலைக்கழக மானிய ஆணையத்திற்கும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திற்கும் கட்டளை பிறப்பிக்கப்பட்டு பல்கலைக்கழகங்கள், மற்றும் பள்ளி அமைப்புகளின் விண்ணப்பங்களில் தந்தை பெயரோடு தாயாா் பெயரை சோ்க்க கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் தோ்வு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதே சமயத்தில் பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து அரசு ஆவணங்களுக்கும் ஒருவரது குடும்ப பெயராக(ள்ன்ழ்ய்ஹம்ங்/ ம்ண்க்க்ப்ங் ய்ஹம்ங்) தாயாா் பெயரை அறிமுகப்படுத்தும் திட்டம் அரசுக்கு இல்லை என அமைச்சா் தெரிவித்தாா்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.