தமிழகத்தில் படித்த மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 வருடங்கள் பூர்த்தி ஆகியும் வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. இதற்காக ஆகஸ்ட் 31 வரை விண்ணப்பிக்கலாம் என உதவி இயக்குனர் பிரபாவதி தெரிவித்துள்ளார்.
இளைஞர்களுக்கு உதவித்தொகை:
தமிழக அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அதனை தொடர்ந்து படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ஆகஸ்ட் 31 வரை சமர்ப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் உதவி இயக்குநர் பிரபாவதி தெரிவித்து உள்ளார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித்தகுதியை பதிவு செய்து 5 வருடங்களாக வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள், உயர்கல்வி படித்தவர்கள் மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் என அவரவர் கல்வித்தகுதிக்கு ஏற்ப ஊக்கத்தொகை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு ஆர்வமுள்ளவர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தகுதி உடையவர்கள் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து கொடுக்கலாம். தற்போது கொரோனா பேரிடர் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால் ஆன்லைன் மூலம் தனது விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என கூறப்பட்டு உள்ளது. மேலும் விவரங்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தினை அணுகவும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.