இந்தியாவில் தேசிய மனித உரிமைகள் சார்பில், உணவு உரிமை குறித்து கூட்டம் நடத்தப்பட்டது. அதில் தற்போது 8ம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வரும் மதிய உணவு திட்டத்தை 12ம் வகுப்பு வரை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
மதிய உணவு திட்டம்:
இந்தியா முழுவதும் பள்ளிகளில் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான ஏழை, எளிய குழந்தைகள் பயன் பெற்று வருகின்றனர். முதன் முதலில் தமிழகத்தில் தான் மதிய உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது. முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களால் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு நாடு முழுவதும் மதிய உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டு தற்போது வரை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மதிய உணவு திட்டத்தின் மூலம் மாணவர்கள் இடைநிற்றல் இன்றி பள்ளிக்கு வருகின்றனர். இந்த நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் உணவுக்கான உரிமை குறித்து டெல்லியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் உணவு சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. தாய் பால் ஊட்டுதலை ஊக்கப்படுத்துவது, பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் திண்பண்டங்களில் அதிக சர்க்கரை, உப்பின் அளவைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் நாடு முழுவதும் இயங்கி வரும் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் யோஜனா, உணவு பாதுகாப்பு திட்டம் ஆகியவற்றை நீட்டிக்க வல்லுநர்கள் ஆலோசனை வழங்கினர்.
அதனை தொடர்ந்து தற்போது இந்தியா முழுவதும் 8ம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வரும் மதிய உணவு திட்டத்தை 12ம் வகுப்பு வரை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் மூலம் மாணவர்களுக்கு தொடர்ந்து ஊட்டச்சத்து கிடைக்கும். கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருவதால், இனி வரும் கல்வியாண்டில் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.