சென்னை அரசு எம்ஜிஆர் திரைப்படம், தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் செப்டம்பர் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வெளியானதை அடுத்து அனைத்து கல்லூரிகளிலும் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்த உயர் கல்வித்துறை அனுமதி வழங்கியது. மற்ற கல்லுரிகளை தொடர்ந்து அரசு எம்ஜிஆர் திரைப்படம், தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்திலும் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. இந்த கல்வி நிறுவனம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கி வருகிறது. இந்தியாவிலேயே முதன் முறையாக திரைப்பட தொழில்நுட்பங்களுக்கான இளங்கலை – காட்சிக்கலை (Bachelor of Visual Arts) எனும் நான்கு ஆண்டு கால பட்டப்படிப்புகளைப் பயிற்றுவித்து வருகிறது. இங்கு ஒளிப்பதிவு, எண்மிய இடைநிலை, ஒலிப்பதிவு, இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல், உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன் போன்ற பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 12ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
மேற்குறிப்பிட்ட படிப்புகளில் சேர ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்கள் www.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் 12ம் தேதி முதல் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி சான்றிதழ்களை இணைத்து தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம், சி.ஐ.டி. வளாகம், தரமணி, சென்னை – 600 113 என்ற முகவரிக்கு தபால் மூலமாக 09.09.2021 அன்று மாலை 5 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.