Breaking

Tuesday, August 17, 2021

தமிழ்நாட்டில் பள்ளிகளை திறப்பது குறித்து ஆகஸ்ட் 20ஆம் தேதி முடிவு: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

தமிழ்நாட்டில் பள்ளிகளை திறப்பது குறித்து ஆகஸ்ட் 20ஆம் தேதி முடிவு: அன்பில் மகேஷ் தகவல்
தமிழ்நாட்டில் பள்ளிகளை திறப்பது குறித்து ஆகஸ்ட் 20ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் அளித்துள்ளார்.
செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க உத்தேசித்துள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

முதல்வருடன் 20ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
"தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று குறைந்துள்ளதை அடுத்து, பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு கட்டங்களாக பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. இதனால் தமிழகத்திலும் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை செப்டம்பர் 1 முதல் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவழைக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில், செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுமா என்பது குறித்து வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேத்தி முடிவு செய்யப்படும் என அமைச்சர் தகவல் வெளியிட்டுள்ளார்.

இன்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடனான கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் இவ்வாறு கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. "

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog